Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Premalatha Mother: "அம்மா BYE மா"! தாய் அம்சவேணிக்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்திய பிரேமலதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய் அம்சவேணியின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடந்த நிலையில் வீட்டிலிருந்து அவரது உடல் ஊர்வலமாக புறப்பட்ட போது "அம்மா BYE மா" என கண்ணீருடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தனது தாயை வழியனுப்பி வைத்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மாமியாரும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயுமான அம்சவேணி, நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

premalatha lk sudhish dmdk

அம்சவேணி தனது கணவர் இறந்ததும் குடியாத்தத்தில் இருந்து சென்னையில் உள்ள தனது மகன் சுதீஷ் வீட்டில் இருந்தார். இவருக்கு ராதா, பிரேமலதா, சுதீஷ் ஆகிய இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அம்சவேணி அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர் என்பது அவரது இறப்புக்கு வந்தவர்களை பார்க்கும் போதே தெரிகிறது.

நேற்றைய தினம் காலை அம்சவேணியின் உயிர் பிரிந்த போது மகள் பிரேமலதாவும் மகன் சுதீஷும் எதிர்பாராதவிதமாக ஈரோட்டில் பூத் முகவர்கள் கூட்டத்திற்கு சென்றிருந்தனர். அவர்களுக்கு இந்த துக்க செய்தி தெரிவிக்கப்பட்டதும் அந்த கூட்டங்களை ரத்து செய்துவிட்டு கண்ணீருடன் இருவரும் சென்னைக்கு வந்தனர்.

அம்சவேணியின் இறப்புக்கு, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் தனது தாயை பார்க்க சுதீஷுடன் சாலிகிராமம் இல்லத்திற்கு நேற்று பிரேமலதா வந்தார். அவர் தனது தாயின் உடலை பார்த்து "அம்மா அம்மா..." என கதறி அழுதார். பின்னர் தனது மூத்த சகோதரி ராதாவை கட்டி அணைத்து கதறி அழுதார். இதை பார்த்தோரும் கலங்கினர்.

தனது பாட்டி அம்சவேணி இறந்ததை அறிந்து மாமா சுதீஷ் வீட்டிற்கு விஜய பிரபாகரனும் சண்முகபாண்டியனும் வந்தனர். அப்போது அவர்களை அழைத்துச் சென்று தனது தாயின் உடலை காட்டினார் சுதீஷ். உடனே இருவரும் அழுதனர். இதையடுத்து பிரேமலதா, "உங்களை தூக்கி வளர்த்த பாட்டியை பாருங்கப்பா, பாட்டி டேடிகிட்ட (விஜயகாந்த்) போய்ட்டாங்கப்பா" என கதறிய பிரேமலதா, "அம்மா பசங்க வந்திருக்காங்க பாருங்கம்மா, பேரனுங்க வந்திருக்காங்க, எழுந்து பாருங்க" என கண்ணீர் விட்டார்.

இந்த நிலையில் அம்சவேணியின் உடலுக்கு இன்று இறுதி சடங்குகள் நடந்தன. மாலை 4 மணியளவில் சாலிகிராமத்தில் இருந்து போரூர் மயானத்திற்கு அம்சவேணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அம்மாவை வழியனுப்ப பிரேமலதா, ராதா உள்ளிட்டோர் வீதி வரை வந்தனர். தனது அம்மாவின் ஊர்வலம் தொடங்கியதும் பிரேமலதா, கண்ணீருடன் "அம்மா BYE மா" என தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+