சாலிகிராம வீட்டிற்கு ஃப்ரீசர் பாக்ஸில் வந்த கேப்டன்.. நொறுங்கிய தொண்டர்கள்.. கதறி அழுத பிரேமலதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அவருடைய சாலிகிராம வீட்டிற்கு வந்ததுமே கதறிய தொண்டர்களை பார்த்து பிரேமலதாவும் கண்ணீர் விட்டபடியே வந்தார். இது இதயத்தை நொறுக்கிய காட்சிகளாகவே இருந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதனால் அவர் கட்சி அலுவலகங்களில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார்.

Premalatha Vijayakanth broke into tears when his body taken to house

இந்த நிலையில் அவருக்கு திடீரென இருமல், காய்ச்சல். சளி தொந்தரவு ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சில நேரங்களில் தானாக சுவாசிக்க சிரமம் இருந்ததாக சொல்லப்பட்டது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் அவரை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் இருந்து 12 ஆம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.

இதையடுத்து அவரது சாலிகிராமம் இல்லத்திலும் கோயம்பேடு கட்சி அலுவலகத்திலும் தொண்டர்கள் குவிந்தனர். இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது இறப்பு குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை தொட்டபடிய கதறினர். சிலர் ஆம்புலன்ஸை அடித்து கேப்டன் எழுந்திரிங்க என கதறினர். இந்த நிலையில் விஜயகாந்தின் உடல் வீட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அப்போது தொண்டர்கள் கதறினர். உடனே ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிய பிரேமலதாவும் கதறியபடியே வந்தார். தொண்டர்களை பார்த்து அவர் துக்கம் தாளாமல் கதறினார். அவரை கட்சி நிர்வாகிகளும் போலீஸாரும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

வீட்டில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு பக்கத்தில் நின்றவாறே பிரேமலதா கதறி அழுத காட்சிகள் பார்ப்போர் மனதை கலங்க செய்கிறது. விஜி சார்! எழுந்திருங்கள், எல்லாரும் அழுகிறார்கள், கண்ணீரை துடையுங்கள் என சொல்ல தோன்றுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+