Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களே நம்புங்க.. விஜயகாந்த் கண்டிப்பா பிரச்சாரத்திற்கு வருவாராம்.. சொல்கிறார் பிரேமலதா

விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார் என பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Vijayakanth Election Campaign : தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜயகாந்த்

    சென்னை: பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாள்தான் இருக்கு.. ஆனால் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவாராம்.. அதை 2 நாளில் நமக்கு சொல்வாராம் பிரேமலதா!

    விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லைன்னு நமக்கு தெரியும். அதனாலதான் 4 வருஷமா ஒதுங்கியே இருக்கார். பிரேமலதாவுக்கு பொருளாளர் பதவி உட்பட கட்சியின் பொறுப்புகளிலும் நிறைய மாற்றம் கேப்டன் கொண்டு வந்தார்.

    கூட்டணி சம்பந்தமான விஷயம் வரும்போதும், பிரேமலதாவும், சுதீஷூம்தான் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார்கள். நேர்காணலின்போதும் விஜயகாந்த், தன் ஒற்றை விரலால் தொண்டையை காரணம் காட்டி பேச முடியாது என்று சைகையால் சொல்லிவிட்டார்.

    பேசவில்லை

    பேசவில்லை

    அமெரிக்காவில் இருந்து ஊருக்கு வந்ததில் இருந்து இதுவரை மக்களிடம் விஜயகாந்த் பேசவே இல்லை. தன் கட்சி தொண்டர்களிடம் கூட தேர்தல் சம்பந்தமாக உற்சாகம் தரும்படி எதுவுமே சொல்லவில்லை. இப்போதைக்கு விஜயகாந்த்தால் பிரச்சாரம் செய்ய முடியாது என்று டாக்டர்களும் சொல்லி விட்டார்கள். அதற்கேற்றபடிதான் இத்தனை நாளாக பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் பிரச்சாரம் செய்து கொண்டுள்ளனர்.

    பிரச்சார பீரங்கி

    பிரச்சார பீரங்கி

    அந்த கட்சி சார்பில் போட்டியிடும் சுதீஷ் என்ன பேசுகிறார் என்றே வெளியில் தகவல் வரவில்லை. விஜய பிரபாகரனோ சமீப காலமாகத்தான் பிரச்சாரம் செய்து வருகிறார். அதுகூட எப்போது என்ன வார்த்தையை பேசிவிடுவாரோ என்று நமக்கு ஒரு பக்கம் அள்ளு கிளம்புகிறது. கட்சியின் பிரச்சார பீரங்கியான பிரேமலதாவோ தினமும் எதையாவது ஒன்றை பேசி பல்பு வாங்கி வருகிறார். சில சமயம் பிரச்சார வேனை விட்டு கூட கீழே இறங்குவதில்லை.

    முட்டாள்களா?

    முட்டாள்களா?

    இவ்வளவும் தன் பக்கம் வைத்து கொண்டு, விஜயகாந்த் பிரச்சாரம் செய்வாரா, மாட்டாரா என்பது குறித்து இன்னும் 2 நாளில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது சொல்லிவிட்டு போகிறார் என்றால், இதையெல்லாம் கேட்க மக்கள் முட்டாள்களா? அல்லது இவர் முட்டாள் ஆக்க பார்க்கிறாரா? என்று தெரியவில்லை.

    பிரார்த்தனை

    பிரார்த்தனை

    விஜயகாந்த் பூரண குணமடைந்து, பழைய மாதிரி சிம்ம குரலுடன், அதே கெத்துடன் வர வேண்டும் என்பதுதான் நமக்கெல்லாம் ஆழ் மனதின் ஆசையே! அதுதான் தமிழக மக்களின் பிரார்த்தனையும்கூட! இப்படி விஜயகாந்த் முழு குணமாக வேண்டும் அதன் பிறகு அவர் வெளியே வருவதுதான் முறையாகவும், சரியாகவும் இருக்கும் என்ற யதார்த்தை நாம் புரிந்து கொண்டுள்ளோம்!

    தேமுதிக

    தேமுதிக

    ஆனால் "வருவார், வந்து கொண்டிருக்கிறார், வந்து விடுவார்" என்று கூறி மக்களை ஏமாற்றப் பார்த்தால் அது தேமுதிகவுக்கே எதிராக போகும். பிரேமலதா எப்போதான் மக்களை சரியாக புரிந்து கொள்வாரோ!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+