Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணனின் பதவி பறிபோனதற்கு திமுகதான் காரணம்! பிரேமலதா அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் நிர்பந்தம் காரணமாகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

யாரும் போராட கூடாது என எதிர்கட்சிகளின் குரல்வளையை திமுக அரசு நசுக்குகிறது.தமிழக அரசு மினி அவசரநிலை கொண்டு வந்துள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

premalatha vijayakanth k balakrishnan dmdk

பெண்களுக்கும்,மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்,பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும்,பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யபட்டு பாரிசில் உள்ள தனியார் மண்டபத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிர்வாகிகளை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார்.

கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க 20 நிமிட காத்திருப்புக்கு பிறகே அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஒரு வார காலமாக அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போராட்டம் நடத்த காவல்துறை இறுதிவரை அனுமதி கொடுக்கவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

விஜயகாந்த் நினைவு நாள் அன்று கூட அமைதி பேரணிக்கும் அனுமதி கொடுக்கவில்லை. மக்களுக்காக யாரும் பேசவே கூடாதா?...தேமுதிக, அதிமுக, பாஜக, பாமக யார் போராட்டம் நடத்தினாலும் கைது செய்கிறார்கள், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை திமுக நசுக்குகிறது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது யாரும் உங்களுக்கு அனுமதி மறுக்கவில்லை,நீங்கள் மட்டும் எதற்கு மறுப்பது ஏன்? தமிழக அரசு மினி அவசர நிலை கொண்டு வந்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகள் ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல தான் செய்வார்கள்.

அன்று 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்கள்,இன்று 1000 ரூபாய் கொடுக்க முடியாதது வெட்கக்கேடு இல்லையா?. வரி வசூல் செய்யும் நிலையில் எங்கே செல்கிறது நிதி? பாண்டிச்சேரியில் 750 ரூபாய் கொடுக்கப்படும் பொழுது தமிழ்நாட்டில் ஏன் கொடுக்க முடியவில்லை.

எங்களை அடக்குபவர்கள் பொங்கலுக்கு 1000 ரூபாய் பரிசு தொகை கொடுங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் திமுகவின் நிர்பந்தத்தின் அடிப்படையில் தான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏன் தேசிய கீதம் இரண்டு முறை பாட கூடாதா? ஆளுநர் கேட்பதை அரசு செய்தால் என்ன குறைந்து விட போகிறது. எங்குமே அடக்கி ஆள வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். 2026 தேர்தலில் மக்கள் திருப்பி அடிப்பார்கள். பள்ளி முதல் பல்கலைகழகம் வரை மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் இனி எங்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாலும் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் என்றார்.

சட்டப்பேரவை மரபை ஆளுநர் மதிக்கவில்லை என்று சொல்வது குறித்த கேள்விக்கு ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும். தேமுதிகவை பொறுத்தவரை இரண்டு முறை தேசிய கீதம் பாடுவது தவறில்லை. 20 நிமிடம் என்னை காக்க வைத்த பிறகு தான் என் தொண்டர்களை பார்க்க அனுமதித்தார்கள்.

காவல்துறை வெறும் அம்பு தான். அவர்களை நாங்கள் தவறாக சொல்லவில்லை, அம்பு எய்பவர்கள் யார் என்பது தான் இங்கு கேள்வி. விஜகாந்தை ரோல் மாடலாக எடுத்து கொண்ட காவல்துறையினர் தான் இந்தியா முழுவதும் உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுக அரசு குற்றவாளிகளுக்கு துணை போகாமல், மக்களுக்கு துணையாக நிற்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா கடுமையாக விமர்சித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+