"குழந்தை" விஜயகாந்த்.. தொண்டர்கள் கண்ணீர்.. "ஆகஸ்ட் 15"-க்கு குவியும் கண்டனங்கள்.. பிரேமலதா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். அவரை யாரும் கஷ்டப்படுத்தவில்லை. எனவே வதந்தியை பரப்ப வேண்டாம் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி 76 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் கொடியேற்றும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விஜயகாந்த் வருவதை எண்ணி தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்து அவரை காண கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

தேமுதிக பிரச்சார வாகனத்தில் விஜயகாந்த் கட்சி ஆபிஸுக்கு வருகை தந்தார். அவர் ஏணி மூலம் வேனின் மீது நாற்காலியுடன் தூக்கப்பட்டார். அவருடன் பிரேமலதாவும் இருந்தார். அப்போது விஜயகாந்த் சாய்ந்தபடியே இருந்தார். அவரை பிரேமலதா அவ்வப்போது சேர்த்து பிடித்துக் கொண்டிருந்தார்.

கருப்பு கண்ணாடி

கருப்பு கண்ணாடி

மேலும் அவரது கருப்பு கண்ணாடி விலகிய போது அந்த கண்ணாடியை விஜயகாந்திற்கு போட்டுவிட பிரேமலதா கஷ்டப்பட்டார். அத்துடன் கொடியை ஏற்ற அதற்கான கயிற்றை இழுக்க முடியாமல் தவித்தார். உடனே தேமுதிக நிர்வாகி ஒருவர் கொடிக் கயிற்றை இழுத்துக் கொடுத்தார். அதை விஜயகாந்தின் கையில் பிடித்து கொண்டு பிரேமலதா ஏற்றினார்.

Recommended Video

    சொன்னதை செய்தார் captain Vijayakanth | Actor Thalaivasal Vijay Chat-03 | Filmibeat Tamil
    இனிப்பு ஊட்டும் போது

    இனிப்பு ஊட்டும் போது

    இனிப்பு ஊட்டும் போதும் சரி விஜயகாந்திற்கு பிரேமலதா ஊட்டி விட அவரது முகக்கவசத்தை நீக்க முடியாமல் தவித்தார். பின்னர் முகக்கவசத்தை லேசாக நீக்கி சிறிய பூந்தியை ஊட்டினார். இதையெல்லாம் பார்த்த விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் குழந்தை போல இருந்த விஜயகாந்தை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

    வீடியோ சமூகவலைதளங்கள்

    வீடியோ சமூகவலைதளங்கள்

    இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அப்போது "விஜயகாந்தை கஷ்டப்படுத்தாதீங்க, விட்டுடுங்க. அரசியல் ஆதாயத்திற்காக உடல்நிலை பாதித்தவரை இத்தனை கஷ்டப்படுத்துவதா" என பலர் பிரேமலதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கெல்லாம் இன்றைய தினம் தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.

     பிரேமலதா விஜயகாந்த்

    பிரேமலதா விஜயகாந்த்

    கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் "விஜயகாந்த் நலமுடன் உள்ளார். நீங்கள் அனைவரும் ஆக.15-ம் தேதியன்று கொடியேற்றும்போது பார்த்தீர்கள். 76-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும், அதற்காக நான் தலைமைக் கழகத்திற்கு வருகிறேன் என்று கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார். அதனால்தான் அன்று அவர் அழைத்து வரப்பட்டார். அவரது கையால் தேசியக்் கொடி ஏற்றப்பட்டது.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    இன்றும், நாளையும் உங்கள் அத்தனை பேரையும் சந்திக்க வேண்டும் என்றுதான் தலைவர் விஜயகாந்த் விரும்புகிறார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், அவர் நன்றாக இருக்கிறார், உங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். நீங்களும் தலைவரை சந்திக்க முடியுமா, முடியுமா என்றுதான் கேட்கிறீர்கள். உங்களுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காகத்தான் தலைவர் விஜயகாந்தை அழைத்து வருகிறோம்.

    தவறாக திரிக்காதீர்கள்

    தவறாக திரிக்காதீர்கள்

    ஆனால், இன்றைக்கு பலபேர் அதனை திரித்து ஏன் அவரை கஷ்டபடுத்துகின்றனர்? எதற்காக அழைத்து வருகின்றனர்? என்று அதை ஒரு தவறான பிம்பத்துக்கு தயவுசெய்து யாரும் கொண்டு செல்ல வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அவர் நன்றாக இருக்கிறார். இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமாக இருப்பார் என்று அவர் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+