விஜயகாந்த் அணிந்திருந்த செயினை கழற்றாமலே புதைத்து இருந்தால் கம்பீரமாக இருந்து இருக்குமே!
சென்னை: விஜயகாந்தின் உடல் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக விஜயகாந்த் அணிந்திருந்த செயின் உள்ளிட்ட தங்க நகைகள், பூட்ஸ், கண்ணாடி உள்ளிட்டவற்றை மனைவி பிரேமலதா கழற்றிய நிலையில் அதை செய்யாமல் அப்படியே புதைத்து இருந்தால் கம்பீரமாக இருந்து இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நடித்து எத்தனையோ பேர் அரசியலுக்குள் நுழைந்துள்ளனர். மறைந்துபோன நடிகர் எம்ஜிஆர், ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தனர். அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.

அந்த வரிசையில் இவர்கள் 3 பேருக்கு அடுத்ததாக தமிழக அரசியலில் சாதித்த ஒரு தலைவர் என்றால் அது விஜயகாந்த் தான். நடிகராக இருந்த இவர் தேமுதிக கட்சியை தொடங்கி எம்எல்ஏ ஆகி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார்.
விஜயகாந்துக்கு மாநிலம் முழுவதும் நல்ல செல்வாக்கு இருந்த நிலையில் அவர் அப்படியே செயல்பட்டு வந்தால் வரும்காலத்தில் முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். ஆனால் காலம் அவருக்கு வழிவிடவில்லை. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இவர் அரசியலில் இருந்து ஒதுங்கவே நன்கு வளர்ந்து வந்த தேமுதிகவும் சரிய தொடங்கியது. தற்போது தேமுதிகவுக்கு எம்எல்ஏ, எம்பிக்கள் இல்லாத நிலை உள்ளது.
இந்நிலையில் தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று சென்னை மியாட் மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து நேற்றும், இன்றும் அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு சென்னை தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்துக்கு அவரது உடல் மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் மகன்கள் 2 பேரும் விஜயகாந்த் உடலுக்கு இறுதி சடங்குககள் செய்தனர். இறுதியாக இன்று 7 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக விஜயகாந்த் உடலில் அணிந்திருந்த தங்க செயினை அவரது மனைவி பிரேமலதா கழற்றினார்.
அதன்படி விஜயகாந்த் அணிந்திருந்த தங்க சங்கிலி, கண்ணாடி, பூட்ஸ் உள்ளிட்டவற்றை பிரேமலதா கழற்றினார். அதன்பிறகு தான் அவரது உடல் புதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் விஜயகாந்தின் உடலில் இருந்து தங்க செயினை பிரேமலதா கழற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்ப்போர் விஜயகாந்த் கழுத்தில் கிடந்த தங்க செயினை கழற்றாமல் புதைத்து இருந்தால் கம்பீரமாக இருந்து இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
பொதுவாக ஒருவர் மரணமடையும்போது அவரது இறுதி ஊர்வலத்தில் அவர் விரும்பி அணிந்த தங்க நகைகள் அணிவிக்கப்படும். அதன்பிறகு புதைப்பதற்கு முன்பு அந்த நகைகளை குடும்பத்தினர் கழற்றுவது வழக்கமான ஒன்றுதான். அதனை தான் பிரேமலதாவும் செய்துள்ளார். இருப்பினும் கூட சில பெரும் பணக்காரர்கள் தங்களின் குடும்பத்தை சேர்ந்தவர் மரணத்தை தழுவும்போது அவர்களை நகையோடு புதைப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் தான் விஜயகாந்த் அணிந்திருந்த தேமுதிக கொடியுடன் கூடிய தங்க மோதிரம் கழற்றப்படாமல் புதைக்கப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டின் ஏராளமான மக்களின் மனதை கவர்ந்த தலைவர் என்பதால் அவரது செயினையும் கழற்றாமல் புதைத்து இருக்கலாம் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில் இன்னும் சிலரோ நடிகர் விஜயகாந்த் மேடை ஒன்றில் இதுதொடர்பாக பேசியதை குறிப்பிட்டு வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் விஜயகாந்த்‛‛என்னய்யா.. பெரிய காசு.. காசு.. கோடி.. கோடியா சேர்த்து வைத்து எங்கய்யா போகபோறீங்க.. செத்தாக்கூட அரைஞாண் கயிற்றை அறுத்துவிட்டு தான் புதைப்பார்கள்’’ என கூறியிருந்தார். விஜயகாந்த் மரணத்தை தொடர்ந்து இந்த வீடியோவும் வைரலானது. தற்போது அப்படி நடந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications