3 நாள் சாப்பிட்டால் கொரோனா வராதுன்னு சொன்னாலும் சொன்னாங்க.. அந்த ஹோமியோபதி மருந்துக்கு செம டிமாண்ட்
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை வெறும் வயிற்றில் உட்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் பூவேந்தன் என்பவர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை, கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்க வேண்டுமென்றுக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, இந்த மருந்தை கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தருவதாக கூறியது.

3 நாள்
இந்த மருந்தை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் அரசு கூறியிருந்தது. அதாவது, 3 நாட்கள் தினமும் காலை, எதையும் சாப்பிடும் முன்பாக, வெறும் வயிற்றில், இந்த மருந்தை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

ஹோமியோபதி மருந்து
ஹோமியோபதி மருந்துகள், கொரோனா நோயை குணப்படுத்தும் என்பதற்கான ஆய்வு முடிவுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்தியாவில் அலோபதி மருத்துவத்தின் அடிப்படையிலான மருந்துகளோடு, இந்திய மருத்துவ முறைகளான சித்தா, யுனானி, மற்றும் ஹோமியோபதி மருந்துகளும் சிகிச்சையின் ஒரு பகுதியாக கொடுக்கப்படுகிறது.

யார் சாப்பிடலாம்
ஒரு முறை ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு, தேவைப்பட்டால் ஒரு மாதம் கழித்து மீண்டும் சாப்பிடலாம். யார் வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம். வேறு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களும் சாப்பிடலாம், பக்கவிளைவும் இல்லாத மருந்து என்கிறார்கள் ஹோமியோபதி டாக்டர்கள்.
Recommended Video

விலை அதிகரிப்பு
இந்த மருந்தை மருந்தகங்களில், மருத்துவர் பரிந்துரை இல்லாமலேயே கொடுக்கிறார்கள். எனவே, இதற்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.
சில இடங்களில் 30 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மருந்து, சில இடங்களில் 200 ரூபாய்க்கு கூட விற்பனை செய்கிறார்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications