வைஷாலியின் கழுத்தில் பாருங்க.. சென்னையில் வசமாக சிக்கிய பாதிரியார்.. முடிவுக்கு வந்த நாடகம்
சென்னை: சென்னையில் மனைவியை அடித்து கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்து கொலை செய்த பாதிரியார், உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக நாடகம் ஆடினார். ஆனால் அவர் கழுத்தில் இருந்த காயத்தால் வசமாக சிக்கி கொண்டார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே குணாபா பகுதியைச் சேர்ந்த 35 வயதாகும் பாதிரியார் விமல் ராஜ்க்கு, அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதாகும் வைஷாலி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு வருடம் முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த பொன்மார் பகுதிக்கு விமல்ராஜ் வந்து குடியேறினார். அங்கு அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக அவர் பொறுப்பேற்றார். இதனிடையே சென்னையில் வசித்து வந்த பாதிரியார் விமல் ராஜ்க்கும் அவரது மனைவி வைஷாலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, சென்னை மேடவாக்கம் அடுத்த ஒட்டியம்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த விமல் ராஜ் தனது மனைவி வைஷாலி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்லும்போது உயிரிழந்து விட்டதாகவும் அதனால் அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இதை நம்பிய விமல்ராஜ்ஜின் பெற்றோர் உடலை வீட்டில் வைத்து வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
மும்பையில் இருந்து நேற்று முன் தினம் மாலை ஒட்டியம்பாக்கத்துக்கு வந்த வைஷாலியின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஷால் குமார் ஆகியோர் உடலை பார்த்த கதறி அழுது கொண்டிருந்தனர். அப்போது வைஷாலியின் கழுத்தில் பார்த்த போது காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாழம்பூர் போலீஸில் வைஷாலியின் சகோதார் விஷால் குமார் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸாரிடம் உண்மையை மறைக்க பாதிரியார் முயன்ற போது, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்த பாதிரியார் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கல்யாணம் ஆனதில் இருந்தே தனக்கும் தன் மனைவி வைஷாலிக்கும் தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்தது என்றும். நேற்றுமுன்தினம் தகராறு முற்றியதில் அவரை அடித்து கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்து கொலை செய்ததாகவும் கூறினார். ஆத்திரத்தில் கொலை செய்ததால், கொலையை மறைக்க விரும்பி பாதிரியார் விமல்லாஜன் உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியதாக கூறியிருக்கிறார்.
இதனையடுத்து தாழம்பூர் போலீசார் பாதிரியார் விமல்ராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ததுடன், கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிரியார் மனைவியை கொன்று நாடகமாடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications