சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் பழனிசாமிக்கு வந்த அழைப்பு.. எதிர்முனையில் பேசியது பிரதமர் மோடி.. என்ன கேட்டார்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்தும் முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் சென்னையில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. நேற்று 1219 பேருக்கு சென்னையில் கொரோனா பாதித்து இருந்தது. சென்னையில் மொத்த பாதிப்பு 84598 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. எனினும்பாதிப்பு அதிகரித்து வரும் அதேவேகத்தில் பரிசோதனையும், குணம் ஆகும் விகிதமும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவல் எதிரொலி... கூட்டமாக வரவேண்டாம்... கட்சியினருக்கு ஓ.பி.எஸ்.வேண்டுகோள் கொரோனா பரவல் எதிரொலி... கூட்டமாக வரவேண்டாம்... கட்சியினருக்கு ஓ.பி.எஸ்.வேண்டுகோள்

அதிக நோயாளிகள்

அதிக நோயாளிகள்

ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 49450ஆக உள்ளது. தமிழகத்தில் அதிக டெஸ்ட் செய்யப்பட்டதே அதிக நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் ஒரே நாளில் 48000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு அளவு ஆகும்.

முதல்வருடன் பேச்சு

முதல்வருடன் பேச்சு

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், மருத்துவ சிகிச்சை குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்ததாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை குறித்து

மருத்துவ சிகிச்சை குறித்து

அந்த அறிக்கையில் "இன்று (19.07.2020) காலை, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் , கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

Recommended Video

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா இல்லை
    அதிக பரிசோதனை இந்தியாவில்

    அதிக பரிசோதனை இந்தியாவில்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்போது , இந்தியாவிலேயே, அதிகபட்சமாக தற்போது தமிழ்நாட்டில், நாள் ஒன்றுக்கு 48000 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வரவதாகவும், கொரோனா ரைவஸ் பரவலை தடுப்பதற்கு, தமிழ்நாடு அரசு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துவருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Prime Minister Modi talked with Chief Minister Palanisamy by phone call about the details of corona prevention and medical treatment in Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X