"மிஷன் சவுத்!" மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! ஒரே மாதத்தில் 2வது முறை! இப்போது என்ன பிளான்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இம்மாத கடைசியில் மீண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தமிழகம் வருகிறார்.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளது.

தேசியளவில் இந்தாண்டு லோக்சபா தேர்தல் என்பது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் இருக்கும். ஆனால், தமிழகத்தில் திமுக அதிமுக இடையே தான் பிரதான போட்டி இருக்கும்.
பாஜக கூட்டணி: இங்கே அதிமுக பாஜக கூட்டணி பிரிந்துவிட்ட நிலையில், தனது தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கவே தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க பாஜக தலைவர்கள் நேரடியாக பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாகப் பிரதமர் மோடி நாட்டில் இருக்கும் பல மாநிலங்களுக்கும் சென்று வருகிறார். நிறைவடைந்த பல திட்டங்களைத் தொடங்கி வைக்கும் அவர், புதிதாகவும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி சென்று வருகிறார்.
தமிழக பயணம்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரைப் பிரதமர் மோடி முதலில் கடந்த பிப். மாத இறுதியில் தமிழகம் வந்திருந்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையின் இறுதி நிகழ்வு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் மார்ச் 4ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். முதலில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்குச் சென்ற அவர் ரியாக்டர் திட்டத்தைப் பார்வையிட்டார். அதன் பிறகு சென்னை நந்தனத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். இதற்கிடையே மீண்டும் ஒரு முறை பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இம்மாத இறுதியில் பிரதமரின் தமிழக பயணம் அமைகிறது.
மீண்டும் தமிழகம் வருகிறார்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாகப் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 22ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி இந்த முறை தென்மாவட்டங்களில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. நடப்பாண்டில் பிரதமர் மோடி தமிழகம் வருவது இது 5ஆவது முறையாகும்.
லோக்சபா தேர்தல் குறித்த தேதி இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். இந்த முறை அவர் தென்மாவட்டங்களில் குறிவைத்து பிரச்சாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications