ஜனவரி 2ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. திருச்சி விமான நிலையத்தை திறக்கிறார்.. மாஸ்டர்பிளான் ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை; ஜன.2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை புரிய உள்ளார். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி திருச்சி வருகிறார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.

Prime Minister Modi will come to Tamil Nadu on January 2: Trichy Airport will be inaugurated

திருச்சி விமானம் சேவை: திருச்சிக்கு தொடர்ந்து பல புதிய விமான சேவைகள் கிடைக்க தொடங்கி உள்ளன. அதன்படி திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த சேவை மூலம் 1 மணி நேரம் 15 நிமிடத்தில் பெங்களூருக்கு செல்ல முடியும்.

இரவு 12.15 மணிக்கு இந்த சேவை மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றரை மணிக்கு நள்ளிரவில் இந்த விமானம் பெங்களூரை அடையும். இது தினசரி சேவை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கண்ணை மூடி திறக்கும் முன் பெங்களூருக்கு எளிதாக திருச்சியில் இருந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருச்சியில் இருந்து பெருநகரங்களுக்கு தற்போது பயணம் மிக எளிதாகி உள்ளது.

திருச்சி விமான நிலையம்: இப்படிப்பட்ட நிலையில்தான் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. முன்புறம் கோவில் தோற்றத்திலும்.. பின் புறம் அல்ட்ரா மாடர்ன் தோற்றத்திலும் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

தற்போது திருச்சி விமான நிலையத்தை 1.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். 4.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் நோக்கில், 60 கவுண்டர்களுடன் புதிய முனையம் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சர்வதேச விமானங்களும், நான்கு உள்நாட்டு விமானங்களும் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன, மேலும் இரண்டையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

பீக் ஹவர்ஸில் 2,900 பயணிகளை செயலாக்கும் வகையில் புதிய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் 60 செக்-இன் கவுண்டர்கள் மற்றும் 10 போர்டிங் பிரிட்ஜ்கள் இருக்கும். கட்டுப்பாட்டு அறை, துணை உபகரண அறைகள், டெர்மினல் ரேடார், ரேடார் உருவகப்படுத்துதல், ஆட்டோமேஷன் வசதிகள், விஎச்எஃப், ஏஏஐ அலுவலகங்கள் மற்றும் வானிலை ஆய்வு அலுவலகங்கள் ஆகியவை இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மோடி வருகை: இந்த நிலையில்தான் ஜன.2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை புரிய உள்ளார். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி திருச்சி வருகிறார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க வாய்ப்புகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிவாரணம் குறித்து தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்க வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் அதிமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான வாய்ப்புகளும் இந்த பயணத்தில் நடக்க வாய்ப்புகள் உள்ளன. அதிமுக சார்பாக ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மோடியை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+