Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயண நேரம் 2 மணி நேரமாக குறைகிறது.. சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை.. டிசம்பரில் பிரதமர் மோடி திறக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் மிக பிரம்மாண்ட விரைவுச்சாலையான சென்னை - பெங்களூர் விரைவுச்சாலையை வருகிற டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை திறக்கப்பட்டால் பயண நேரம் சென்னையின் புறநகரில் இருந்து பெங்களூர் புறநகரை 2 மணி நேரத்தில் அடைய முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் போடப்பட்ட மிக முக்கியமான எட்டுவழிச்சாலை என்றால் அது சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை தான். இது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது ரூ.17 ஆயிரத்து 930 கோடி செலவில் சென்னை- பெங்களூர் இடையே 258 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வதேச தரத்தில் விரைவுச்சாலை (பி.சி.இ.) அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவுச்சாலை சென்னையின் புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கும் இந்த விரைவு சாலை, கர்நாடக மாநிலம் ஹோஸ்கோட்டில் (பெங்களூர் புறநகர் பகுதி) முடிவடைகிறது. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மாநிலங்களின் முன்னேற்ற வளர்ச்சிக்காக இந்த சாலையை மத்திய அரசு அமைத்துள்ளது.

chennai bangalore expressway

தற்போதைய நிலையில் சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டும் என்றால், சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் செல்ல வேண்டும். ஆனால் புதிய சாலை எப்படி என்றால் சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் பொன்னப்பன்தங்கல், இராணிப்பேட்டை, சித்தூர், பங்காருபாலம், பலமனேர், பங்காரப்பேட்டை, ஹோஸ்கோட் வழியாக பெங்களூர் போக முடியும்.

இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டம் அல்ல.. கடந்த 1990-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் தொடங்கப்பட்டது. மொத்தம் 2 ஆயிரத்து 560 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையில் 41 சுரங்கப்பாதைகள், 17 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியுமாம். அந்த அளவிற்கு சாலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்படும் முதல் விரைவுச் சாலை இதுதான் என்பதால் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல மிகுந்த ஆர்வம் காட்டுகிறாரகள். சென்னை- பெங்களூர் தற்போதைய வழித்தடத்தில் 5.30 மணி நேரம் முதல் 6 மணி நேரத்தில் செல்ல முடியும். ஆனால் புதிய சாலையில் 2.15 மணி நேரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து , ராணிப்பேட்டை, சித்தூர், பங்காருபாலம், பலமனேர், வெங்கடகிரிகோட்டா, தங்கவயல், பங்காரப்பேட்டை, மாலூர் மற்றும் ஹோஸ்கோட்டை (பெங்களூர் அருகே)அடைய முடியும். இந்த சாலை பெங்களூர் சிட்டி, பெங்களூர் ஊரகப்பகுதிகள், கர்நாடகாவின் கோலார், ஆந்திராவின் சித்தூர், தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் செல்கிறது.

இந்த சாலை எதற்காக போடப்பட்டுள்ளது என்றால், பெங்களூரில் இருந்து சென்னை துறைமுகத்தை இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போடப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தை கர்நாடகா, ஆந்திரா, தமிழக கண்டெய்னர் லாரிகள் எளிதாக அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை எண்ணூரில் உள்ள சர்வதேச துறைகமுத்திற்கு வாகனங்கள் வந்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட தொழில் வழித்தடம் ஆகும். இந்த சாலை செல்லும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சித்தூர், கோலார் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி மேம்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னை பெங்களூர் புதிய விரைவு சாலை சந்தித்து செல்லும் ராணிப்பேட்டை தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகும். இங்கு தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் மேம்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது சிப்காட் ஃபேஸ் 3 மற்றும் 260 ஏக்கா் நிலப்பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சா்வதேச தொழில் நிறுவனங்கள் பல தொழிற்சாலையை நிறுவி உற்பத்தியை தொடங்கி உள்ளன. அதே போல் அரக்கோணம் அருகே பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.1,000 கோடி மதிப்பில் தோல் அல்லாத காலணி பிரிவு ஒன்றை தைவானைச் சோ்ந்த ஹாங் ஃபூ குழுமம் நிறுவ இருக்கிறது.

இப்படி பல தொழிற்சாலைகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உருவாக உள்ளது. இதுதவிர ஏற்கனவே ஆயிரக்கணக்கான பிரம்மாண்ட நிறுவனங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. சென்னையின் பொருளாதார மையமாக காஞ்சிபுரம் மாவட்டம் திகழ்கிறது. இந்த புதிய சாலை இந்த பகுதியில் மேலும் பல நிறுவனங்கள் உரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழில்களை ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது. பரந்தூர் விமான நிலையமும் பக்கத்திலேயே வருவதால் புதிய சாலை வழியாக எளிதாக சென்னைக்கு வர முடியும்.

இந்த சாலை குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சென்னை - பெங்களூர் விரைவுச்சாலையால் சென்னைக்கும் பெங்களூருவுக்கும் இடையிலான பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக குறையும் வாய்ப்பு உள்ளது. கர்நாடக மாநிலத்தின் ஆட்டோமொபைல் மையமான ஹோஸ்கோட் பகுதியில் இருந்து விரைவுச் சாலை திறக்கப்படுவதால், அதிக வேலை வாய்ப்புகள் இந்த திட்டத்தால் உருவாகும். இந்த புதிய அதிவேக நெடுஞ்சாலை தூரத்தை குறைக்கும், மேலும் பயணம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் அமையும்.

இந்த விரைவுச் சாலை முதலில் 8 வழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டது.ஆனால் திட்டமிடப்பட்ட போக்குவரத்தை மனதில் வைத்து 2020-ம் ஆண்டின் நடுப்பகுதியில் 4 வழிச்சாலையாக தரமிறக்கப்பட்டது. இந்த விரைவுச் சாலையானது 21 மீட்டர் அகலமுள்ள தாழ்த்தப்பட்ட இடைநிலையைக் கொண்டிருக்கும். அதேநேரம் அனைத்து கட்டமைப்புகளும் (பாலங்கள்) எதிர்காலத்தில் உள்ளே இருந்து 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்டுமானப்பணிகளை நிறைவு செய்து வருகிற டிசம்பர் மாதத்துக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்" என்று அதிகாரிகள் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+