திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''முந்தைய ஆட்சியில் (திமுக அரசு) 1,000 பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டார்கள். தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வாங்க ரூ.25 லட்சம் வரையும் கொடுத்தோம். ஆனால் இப்போது ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் 1,000 பள்ளிகளின் தொடர் அங்கீகாரத்தை முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செய்துள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்கது. கல்வித்துறையில் இதுவரை யாரும் செய்யாதது'' என்று தனியார் பள்ளி கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகினறன. சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 1,000 தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் கடிதங்களை கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

private-school-recognition-rs-25-lakhs-for-previous-govnerment-but-vijay-did-not-get-ruppee-says-p

கடந்த 2 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கான கோப்புகள் தேங்கி கிடந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று ஒரே நாளில் 1000 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளி கூட்டமைப்பினர் ஹேப்பியாகி உள்ளனர்.

இதுபற்றி சென்னை தலைமை செயலகத்தில் தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நிர்வாகி கூறுகையில், ''முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆணைப்படி தமிழ்நாட்டில் 1000 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் 2 ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் அப்படியே தேங்கி கிடந்தது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திலேயே தொடர் அங்கீகாரத்தை புதுப்பித்து அமைச்சர் கரங்களால் கொடுத்துள்ளார். குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் என்ஓசிக்கு பல லட்சம் செலவு செய்ய வேண்டும். குறிப்பாக ரூ.25 லட்சம் வரை செலவு செய்தால் தான் என்ஓசி கிடைக்கும். அதற்காக ரொம்ப சிரமம் எடுத்து வாங்க வேண்டி இருந்தது. ஆனால் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் தொடர் அங்கீகார ஆணையை முதல்வர் விஜய் வழங்கி உள்ளார்.

இது வரலாற்று சிறப்பு மிக்கது. கல்வி துறையில் இதுவரை யாரும் செய்யாதது. செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது
ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளின் தொடர் அங்கீகாரத்தை அவரது கரங்களால் வழங்கினார். அவர் தான் தொடக்கி வைத்தார். அதேபோல் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது கரங்களால் கொடுத்துள்ளார். உண்மையிலேயே முதலமைச்சர் , பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். கண்டிப்பாக நாங்கள் எங்களின் அமைப்பில் மீட்டிங் போட்டு எந்த அளவுக்கு செய்யலாம் என்பது பற்றி முடிவு செய்வோம். ஏனென்றால் பள்ளி அங்கீகாரத்துக்கு இனி செலவு இருக்காது என்பதால் இதுபற்றி ஆலோசித்து முடிவெடுப்போம்'' என்றார்.

இதையடுத்து அங்கீகாரம் பெற கொடுத்த பணம் லஞ்சமாக வழங்கப்பட்டதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகி கூறுகையில், ''கட்சி நிதி என்று ஒன்று உள்ளது. அனைத்து துறைகளிலும் இது உள்ளது தான். கல்வித்துறையில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் ரூ.3 லட்சம், ரூ.4லட்சம் வரையும், என்ஓசி வாங்கும்போது ரூ.25 லட்சம் வரையும் கொடுத்தோம். பணம் கொடுத்தாலும் காலதாமதம் இருந்தது. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக முந்தைய அரசில்ல் தேங்கி கிடந்த கோப்புகளுக்கு இப்போது அனுமதி கிடைத்துள்ளது. 1,000 பள்ளிகளுக்கான அங்கீகாரம் நேற்று கொடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+