புக்ஸோட வாட்டர் பாட்டிலையும் மறக்காம கொண்டு வாங்க.. சென்னை நிலைமை மோசமடைகிறது!
Recommended Video
சென்னை: சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகள் கையில் தங்களுக்கு தேவையான தண்ணீரை பாட்டிலில் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.
தமிழகம் முழுவதுமே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பருவமழை போதுமான அளவு பெய்யாததால் சென்னை முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் தனியார் லாரிகளில் தண்ணீர் வாங்கியே வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பி வருகின்றனர் மக்கள்.

தண்ணீர் கொண்டுவரவேண்டும்
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை பள்ளிக்கு வரும்போதே கையில் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தனியார் பள்ளிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

ஏற்கனவே புத்தகப்பை
சில அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு போதுமான அளவு குடி நீர் வசதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே மாணவர்கள் புத்தகப்பைகளை சுமக்க முடியாமல் சுமந்து செல்கின்றனர்.

அரசுக்கு கோரிக்கை
இந்நிலையில் மாணவர்களே கையில் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வரவேண்டும் என பள்ளிகள் அறிவுறுத்தியிருப்பது பெற்றோரை கவலையடையச் செய்துள்ளது. பள்ளிகளே மாணவர்களுக்கு குடிநீர் வழங்க அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கில் கட்டணம்
பள்ளிகளின் அடிப்படை வசதிகளில் ஒன்று மாணவர்களுக்கு போதுமான குடிநீர் வழங்குவது. ஆனால் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மாணவர்களையே குடிக்க தண்ணீர் கொண்டுவருமாறு கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications