பிரியா சடலத்தின் மீது "கப்"கள்.. "ம்மா.. பசியா அனுப்பிடாதே".. கால் அழுகிடுச்சாமே.. கண்ணீர் தோழிகள்
பிரியா குறித்து உருக்கமான தகவல்களை அவரது தோழிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர்
சென்னை: காலை எடுக்க போவதாக டாக்டர்கள் சொன்னதுமே, கதறி கதறி பிரியா அழுததாக, அவரது நெருங்கிய தோழிகள் உருக்கமான தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கால்பந்து வீராங்கனை பிரியா, மூட்டு வலி பிரச்சினையால் அவதிப்படவும், சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அப்போது, வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாக டாக்டர்கள் சொல்லியதுடன், ஆபரேஷனும் செய்ய வேண்டும் என்று அட்வைஸ் தந்துள்ளனர்..

பிரியா
அதன்படியே ஆபரேஷன் செய்து முடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. இதனால், மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.. ஆனாலும் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதையடுத்து, வலது கால் அகற்றப்பட்டது... எனினும், தொடர் சிகிச்சையில் இருந்த பிரியா, இன்று காலை திடீரென உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் தோழிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதனிடையே, பிரியாவின் உறவினர்கள், தோழிகள் என பலரும் பிரியா பற்றின உருக்கமான தகவல்களை சொல்லி வருகிறார்கள்.

டேஞ்சர்
அந்தவகையில், பிரியாவின் தோழிகள் செய்தியாளர்களுக்கு தந்த பேட்டியில், "அந்த கட்டு போட்டதுதான் தப்பா போச்சு.. அதை மட்டும் டாக்டர்கள் உடனே பார்த்திருந்தால் பிரியா உயிரோட இருந்திருப்பாள்.. வலி அதிகமாகவேதான் ஆபரேஷன் செய்யணும், கால் அழுகி போயிருக்கு.. இப்படியே விட்டால் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னாங்க.. வலியில் துடிச்சிட்டே இருந்தாள்.. ஊசியும் போட்டு வலி குறையல.. அதனால், கால் எடுக்க போறோம்னு பிரியாகிட்ட சொல்லி இருக்காங்க. அவ்வளவு வலியிலும், வேணாம், என்று சொல்லி அழுதிருக்காள்..

ஒரே ஆசை
அதற்கு டாக்டர்கள், மறுபடியும் கால் வந்துவிடும்.. நீ முன்னாடி மாதிரியே, கிரவுண்டில் போய் விளையாடலாம் என்று சொல்லவும்தான், கால் எடுக்கவே பிரியா சம்மதித்தாள்.. காலை எடுத்தும்கூட 3 நாள் ஐசியூவில்தான் இருந்தாள்.. அவங்க அம்மா, அப்பாவைகூட உள்ளே விடவில்லை.. சாப்பாடு நேரத்தில் மட்டும் உள்ளே போய் வருவார்கள்.. சிரிச்சிட்டே இருப்பாள், பிரியா அழுது நாங்க யாருமே பார்த்ததே இல்லை.. இந்தியாவுக்கு விளையாடணும் என்பதுதான் அவளுக்கு ஒரே ஆசை.. நாங்க 3 நாளுமே ஆஸ்பத்திரியில்தான் இருந்தோம்..

கப்கள் + அவார்டுகள்
ஆனால், வெளியேதான் நின்னுட்டிருந்தோம்.. உள்ளே போறதுக்கு விடல.. இந்த 3 நாளும் அவங்க அம்மாகிட்ட, எங்களை பத்தி சொல்லிட்டே இருந்திருக்கா.. அம்மா, அவங்களை எல்லாம் சாப்பிட வெச்சு அனுப்புமா, பசியா அனுப்பிடாதே.. ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாளாம் என்று தேம்பி தேம்பி அழுது சொல்கிறார்கள் அந்த தோழிகள்.. இறுதி அஞ்சலியின்போது, பிரியாவின் சடலத்தின் மீது அவர் விளையட்டில் இதுவரை வாங்கிய கோப்பைகளையும், விருதுகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து வைத்து, பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர்.. இத்தனை கப் எதுக்குடா வாங்குனே? ஏன்டா நாங்க கூப்பிடறது காதில விழலயா? என்று அழுது கேட்டு கண்ணீர் வடித்தனர்.












Click it and Unblock the Notifications