சொத்து வாங்குவோருக்கு ஜாக்பாட்? நாளை தமிழக பத்திரப்பதிவு செய்ய காத்திருந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் வருமா
சென்னை: நாளை சுபமுகூர்த்த தினத்தையொட்டி, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழக அரசுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.. இந்த கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யும் பட்சத்தில், பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு அது மிகுந்த நன்மையையும் வசதியையும் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..
தமிழகத்தில் வீடு, மனை வாங்குபவர்கள், அதற்கான பத்திரங்களை பதிவு செய்வது வழக்கமாகும்.. குறிப்பாக, சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சுப முகூர்த்த தினத்துக்காக பத்திரப்பதிவு செய்யாமல் எத்தனையோ பேர் காத்திருக்க செய்கிறார்கள். பத்திரப்பதிவு ஆபிஸில் முகூர்த்த நாட்களில் மக்கள் பத்திரங்களை பதிவு செய்ய அலைமோதுகின்றனர். சில நேரங்களில் முகூர்த்த நாட்கள் வார விடுமுறை நாட்களில் வந்து விடுவதால் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் லாபம்
இப்படியான நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே, குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினங்களில் கூடுதலாக பத்திரவுப்பதிவுக்கான டோக்கன்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு என சொல்லப்படும் பெயிராவும் இதையே தொடர்ந்து வலியுறுத்தியபடி வருகிறது.. இதன் மூலம் பதிவுத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும் என்றும் தெரிவித்து வருகிறது...
நாளை சுபமுகூர்த்த தினம்
இந்நிலையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், எதிர்வரும் 06.03.2026 வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்கிட ஆவண செய்யக் கோரி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நாளை 06.03.2026 வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு இந்நன்னாளில் பெரும்பாலான பொதுமக்கள் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் - மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் அடைகின்றார்கள்.
வாஸ்து நாள் - முன்பதிவு வில்லைகள்
எனவே சுபமுகூர்த்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பாக பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல சார் பதிவாளர் அலுவலகங்களில் சுபமுகூர்த்த தினங்களில் ஆவண பதிவு செய்ய தேவையான அளவிற்கு முன்பதிவு வில்லைகளை வழங்குவதில் பற்றாக்குறை நிலவுவதின் காரணமாக பெரும்பாலான பொதுமக்களுக்கு முன்பதிவு வில்லைகள் கிடைக்க பெறாமல் ஏமாற்றத்துக்கும், மனவருத்தத்திற்கும் உள்ளாகின்றனர்.
எனவே பொதுமக்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து ஆவண பதிவுகளை அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் வழக்கத்தைவிட கணிசமாக முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்கிட வேண்டுகிறோம்.
கூடுதல் வருவாய் - கூடுதல் டோக்கன்கள்
இவ்வாறு கணிசமான அளவில் முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்குவதன் மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும்.
ஆகவே தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, சுபமுகூர்த்த நன்னாளில் பத்திர பதிவு செய்ய விரும்பும் மக்கள் மகிழ்வுறும் வகையில் தமிழகம் முழுவதிலும் முன்பதிவு டோக்கன்கள் பற்றாக்குறை நிலவும் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்கிட உரிய வழிவகை செய்ய வேண்டுமென" அநத் கடிதத்தில் டாக்டர் ஆ.ஹென்றி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications