சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?
சென்னை: தமிழகத்தில் நிலம் அல்லது வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் தங்கள் சொத்துக்களை விற்கக் காத்திருப்பவர்கள் இந்த மார்ச் மாத இறுதியில் ஒரு மிகப்பெரிய இக்கட்டான சூழலை சந்திக்க போகிறார்களாம்.. ஆம், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் பத்திரப்பதிவு துறையில் சில அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, முத்திரைத் தீர்வை போன்றவற்றில் சில திருத்தங்கள் வரவுள்ளதால், சொத்து பரிமாற்றம் செய்பவர்கள் தங்கள் பட்ஜெட்டில் லட்சக்கணக்கில் கூடுதல் சுமையை சுமக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.. இது குறித்த தெளிவான விழிப்புணர்வு இல்லாதவர்கள், கடைசி நேரத்தில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும்..

முக்கியமாக, கடந்த சில வருடங்களாகவே மாற்றப்படாமல் இருந்த சில பகுதிகளின் வழிகாட்டி மதிப்பை நடப்பு சந்தை விலைக்கு நிகராக உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இதன்படி, இந்த மார்ச் 31க்குள் பத்திரப்பதிவு முடிப்பவர்களுக்கு பழைய கட்டணமே பொருந்தும்.. ஆனால், ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பதிவு செய்பவர்கள், உயர்த்தப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டியிருக்கும்.. இது ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் சேமிப்பில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தக்கூடும். அதனால் டோக்கன் முன்பதிவு செய்திருப்பவர்கள் இந்த 9 நாட்களுக்குள் பத்திரப்பதிவை முடிப்பது லாபகரமானது.
இன்னொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், பட்டா மாறுதல் தொடர்பான ஆன்லைன் நடைமுறைகள் இந்த ஏப்ரல் முதல் மேலும் எளிமையாக்கப்பட உள்ளன. இனி பத்திரப்பதிவு செய்தவுடனேயே தானியங்கி முறையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது..
ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால், பழைய வில்லங்கச் சான்றிதழில் (EC) உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யாமல் இருப்பவர்களுக்கு இந்த தானியங்கி முறை கை கொடுக்காது.. உங்கள் நிலத்தின் விபரங்கள் கணினியில் சரியாகப் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதை இந்த ஒரு வாரத்திற்குள் சரிபார்த்துக் கொள்வது, பிற்கால சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதேபோல், அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் வரன்முறைப்படுத்தப்படாத இடங்களை விற்பனை செய்வதில் ஏப்ரல் முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் வரவுள்ளன.
கடந்த காலங்களில் அரசு வழங்கிய சலுகை காலங்கள் முடிவடைய உள்ள நிலையில், இனி டிடிசிபி அல்லது சிஎம்டிஏ அங்கீகாரம் இல்லாத இடங்களை பதிவு செய்வதில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கடுமையான கெடுபிடிகள் இருக்கும்.
சொத்து வாங்குபவர்கள் வெறும் குறைந்த விலைக்கு ஆசைப்படாமல், அந்த இடத்திற்கு முறையான அங்கீகாரம் இருக்கிறதா என்பதை ஏப்ரல் மாதத்திற்கு முன்பே உறுதி செய்து கொள்வது உங்கள் வாழ்நாள் சேமிப்பை பாதுகாக்கும்..
ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளவர்கள் மற்றும் புதிதாக வீடு கட்டத் திட்டமிடுபவர்கள், இந்த மார்ச் மாத இறுதி கெடுவை ஒரு எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும்.
மார்ச் 31-க்குள் முடிக்கப்படும் ஒவ்வொரு பதிவும் உங்களுக்குக் கணிசமான தொகையை மிச்சப்படுத்தும். உங்கள் வழக்கறிஞர் அல்லது ஆவண எழுத்தரிடம் இப்போதே ஆலோசனை பெற்று, தேவையான ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது..
ஏப்ரல் மாதம் பிறக்கும்போது இவ்வளவு பணத்தை வீணடித்துவிட்டோமே என்று வருத்தப்படுவதை விட, இந்த 9 நாட்களை சரியாக பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என்கிறார்கள் நிபுணர்கள்.. இந்தத் தகவலை நிலம் மற்றும் வீடு தொடர்பான தேடலில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் உடனே பகிருங்கள்..!!
Property owners alert! Huge changes in Registration from April 1 and the New Land rates coming soon
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications