Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகப்பிரிவினை சொத்து.. கிளாஸ் டம்ளரில் மாமியாரை அடித்தே சாய்த்த மருமகள்! பார்த்தாலே இதயம் நொறுங்குதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி, மொத்த பேரையும் பதற வைத்து வருகிறது.. ஒரு பெண் தன்னுடைய மாமியாரை மிக குரூரமாக அடித்து தாக்கும் இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்குமே, ஈரக்குலையே நடுங்கிவிடுகிறது. இந்த வீடியோ போலீசாரின் கவனத்துக்கும் சென்றதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. மற்றொருபுறம் அப்பெண்ணுக்கு கடுமையான கண்டனங்களை இணையவாசிகள் தெரிவித்து வருகிறார்கள். என்ன நடந்தது?

பஞ்சாப் மாநிலம் கோத்தே கிராமத்தை சேர்ந்த பெண் குர்பஜன்கவுர்.. இவர் தன்னுடைய கணவரின் மரணத்திற்கு பிறகு, மகனின் வீட்டில் வசித்து வந்தார்.

partition property daughter in law

சொத்து பிரச்சனை

கடந்த சில நாட்களாகவே இவர்களது வீட்டில் சொத்து பிரச்சனை வெடித்துள்ளது.. இதில், சொத்துக்களை பெயர் மாற்றுவது தொடர்பாக மருமகள் ஹர்ஜீத்கவுர் என்பவருக்கும், மாமியார் குர்பஜன்கவுர் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று, மொத்த சொத்தையும் தன்னுடைய பெயருக்கு மாற்ற வேண்டும் என்று மருமகள் ஹர்ஜீத்கவுர், வயதான மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.. இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து, ஆத்திரமடைந்த மருமகள், தன்னுடைய மாமியாரை கொடூரமாக தாக்க துவங்கிவிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு சோஷியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது.. அந்த வீடியோவில், மாமியார் குர்பஜன்கவுரின் தலைமுடியை பிடித்து இழுத்து மறுபடியும் மறுபடியும், அவரை கண்மூடித்தனமாக தாக்குகிறார் மருமகள் ஹர்ஜீத்கவுர்..

பாட்டியை ஏன் அடிக்குறே

இதை பார்த்த ஹர்ஜீத்கவுரின் மகன் ஓடிவந்து, "அம்மா, ஏன் பாட்டியை அடிக்கிறீங்க? உடனே அடிக்கிறதை நிறுத்துங்க" என கெஞ்சுகிறான். ஆனாலும் மகன்
சொல்வதை காதிலேயே போட்டுக் கொள்ளாத ஹர்ஜீத்கவுர், தொடர்ந்து மாமியாரை ஸ்டீல் டம்ளரில் அடித்து விளாசுகிறார்.. வலி பொறுக்க முடியாமல், மாமியாரின் கண்கள் கலங்குகின்றன.

இதற்கு பிறகு அந்த சிறுவனுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல், தன்னுடைய பாட்டியை அம்மா ஈவிரக்கமின்றி தாக்குவதை, செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு விட்டான்.

இந்த வீடியோவை பார்த்த அனைவருமே கடுமையான கண்டனம் தெரிவிக்க துவங்கினர்.. சம்பந்தப்பட்ட மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.

முழு சொத்துக்களுக்கும் குறி

இதனிடையே, இந்த வீடியோ வைரலானதையடுத்து, பஞ்சாப் மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடிதம் அனுப்பியது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமியார் குர்பஜன்கவுரின் கணவர் தொடக்க கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்... கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.. எனவே சமீபகாலமாகத்தான் தன்னுடைய மகன் வீட்டில் வசித்து வருகிறார்..

அதற்குள் முழு சொத்துக்களையும் தன்னுடைய பெயருக்கு மாற்றித்தரக்கோரி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் தொந்தரவு செய்ய ஆரம்பித்து, இப்போது மனசாட்சியே இல்லாமல் வெளுத்து எடுத்துள்ளார்.

மாமியாரை உதைத்த மருமகள்

சில மாதங்களுக்கு முன்புகூட கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இப்படியொரு சம்பவம் நடந்தது.. தேவலக்கரையைச் சேர்ந்த தம்பதி தாமஸ் - மஞ்சுமோள்.. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

தாமஸின் அம்மா எலியம்மா வர்கீஸுக்கு 80 வயதாகிறது.. இவர் தாமஸ் வீட்டிலேயே இருந்து வருகிறார்.. ஆனால், மாமியாரை, வர்கீஸ் மனைவி மஞ்சுமோள் சரியாக நடத்துவதில்லை..

சம்பவத்தன்று சேரில் உட்கார்ந்து , மாமியார் எலியம்மா டிவி பார்த்து கொண்டிருந்தார்.. அப்போது மஞ்சுமோள் குழந்தை உட்கார சேர் கேட்டுள்ளது.. காது கேட்காததால், எலியம்மா டிவி பார்த்தபடியே இருந்துள்ளார்..

உடனே ஆவேசமடைந்த மஞ்சுமோள், மாமியாரை கடுமையாக திட்டி, சேரில் உட்கார்ந்திருந்த மாமியாரை, இரு கைகளாலும் பிடித்து கொடூரமாக கீழே தள்ளிவிட்டார்.. இதில், கீழே தொப்பென்று விழுந்த எலியம்மா முட்டி, கைகளில் அடிபட்டு, வலியால் அழுதார்

பள்ளி ஆசிரியர்

இந்த சம்பவத்தை வீட்டிலிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர்.. தன்னை வீடியோ எடுப்பது தெரிந்தும்கூட, மஞ்சுமோள் அசராமல், நல்லா வீடியோ எடு என்று சொல்லி தன்னுடைய மேலாடையை உயர்த்தி காட்டினார்.. இந்த மஞ்சுமோள் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவராம்.

தன்னுடைய அம்மாவை கொடூரமாக மனைவி தாக்குவதை, மகன் தாமஸ் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டார்.. உடனே இதை பார்த்த கேரளா போலீசார் மஞ்சுமோளை கைது செய்து அழைத்து சென்றது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+