மக்களே இப்பவே வீடு வாங்கி போட்டுருங்க.. சென்னையில் சொத்து விலை 10-15% உயரப்போகிறது
சென்னை: செப்டம்பரில் தொடங்கும் வரும் காலாண்டில், சென்னையில் சொத்து விலை, 10 முதல் 15 சதவீதம் வரை உயரும் என, இந்திய ரியல் எஸ்டேட் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் சென்னை பிரிவின் தலைவர் எஸ்.சிவகுருநாதன் தெரிவித்துள்ளார்.
OMR மற்றும் போரூர் பகுதியில் உள்ள பல ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஏற்கனவே கட்டணத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர் என்றும், இந்த உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு பொருட்களின் மீதும் வரி அதிகரிக்கப்பட்டதால், 20% அதிகரித்துள்ள கட்டுமானப் பொருட்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது விற்பனையாகாத 5000 யூனிட்களில் பெரும்பாலும் ஓஎம்ஆரில் உள்ளது. தேவை அதிகரிப்பதால் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை 20% அதிகரித்துள்ளது. இரண்டு படுக்கையறைகள் மற்றும் மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தற்போது சென்னையில் அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடம் மற்றும் வசதிகளைப் பொறுத்து, இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை இருக்கும்.
2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சென்னையில் விற்பனை செய்யப்பட்ட அனைத்து யூனிட்களில் 86 சதவீதத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் விற்பனை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நகர்ப்புறங்களுக்கு வெளியே 6.6 சதவீதத்தை விற்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கணிசமான எண்ணிக்கையிலான அடுக்குமாடி குடியிருப்புகளை கூடுதலாக விற்பனை செய்ததாகவும் சிவகுருநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications