பத்திரப்பதிவு விடுங்க.. சொத்து வரி பெயர் மாற்ற கட்டண உயர்வு.. இது எப்போ? உடனே கிளம்பி வந்த "தலைவர்"
சென்னை: வீடு வாங்கியவர்கள், அதற்கான சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம், 20,000 ரூபாய் வரை தற்போது உயர்த்தப்பட்டதாக தெரிகிறது.. இந்த திடீர் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து வரும்நிலையில், இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்க துவங்கி உள்ளன.
தமிழகத்தில், பல வருடங்களாகவே, சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது.. கடந்த 2022 ஏப்ரல் 1ல் சொத்து வரியானது, 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதனடிப்படையில், மற்ற கட்டணங்களும் உயர்ந்து வருகின்றன..

அந்தவகையில், சொத்து வரி அடிப்படையில், வீடுகளுக்கான திடக்கழிவு மேலாண்மை கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், சொத்து வரி பெயர் மாற்ற கட்டணத்தையும், உள்ளாட்சி அமைப்புகள் உயர்த்தியுள்ளன.
கட்டணங்கள்: நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், சொத்து வரி பெயர் மாற்ற வேண்டுமானால், 500 முதல் 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது, இது மாற்றப்பட்டுள்ளது. அதாவது, சென்னை தவிர்த்து பிற மாநகராட்சிகளில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, சொத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் வரை என்றால், 1,000 ரூபாயும், 10 லட்சம் ரூபாய் வரை என்றால் 3,000 ரூபாயும், 20 லட்சம் ரூபாய் வரை என்றால், 5,000 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதைத்தவிர, சொத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் வரை என்றால், 10,000 ரூபாயும், ஒரு கோடி ரூபாய் என்றால், 20,000 ரூபாய் வரையும், அதற்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால், பெயர் மாற்ற ஒவ்வொரு ஒரு கோடிக்கும், 20,000 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்: மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள், மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த கட்டணங்களை நிர்ணயிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி திடுதிப்பென்று அறிவிப்பு எதுவும் வெளியிடாமல், கட்டண உயர்வு வெளியாகி உள்ளது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருவதாக சொல்கிறார்கள்.
இந்த சொத்துவரி பெயர் மாற்றத்துக்கான கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ் கேள்வி: அதில், "கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கும் வரை சொத்து வரி உயர்த்தப்படாது என்று வாக்குறுதி அளித்த திமுக, கரோனா தொற்று இன்று வரை இருக்கும் நிலையில், ஓராண்டுக்கு முன்பே சொத்து வரியை உயர்த்தியது. இதனால் வீட்டு உரிமையாளர்களும், வாடகைக்கு குடியிருப்போரும் பெருத்த பாதிப்புக்கு உள்ளாயினர்.
இந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள், சொத்து வரி பெயர் மாற்றக் கட்டண உயர்வை அறிவிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு திமுக அரசு உத்தரவிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அதாவது, சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு இருந்த ரூ.1500 வரையிலான நிலைக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட உள்ளது.
கோரிக்கை: அதன்படி, சொத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் வரை என்றால் ரூ.1,000 என்றும், ரூ.10 லட்சம் வரைஎன்றால் ரூ.3 ஆயிரம், ரூ.20 லட்சம் வரை என்றால் ரூ.5 ஆயிரம், ரூ.50 லட்சம் வரை என்றால் ரூ.10 ஆயிரம், ரூ.1 கோடி வரை என்றால் ரூ,20 ஆயிரம், அதற்கு மேல் ஒவ்வொரு கோடிக்கும் ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும். திமுக அரசின் இந்தநடவடிக்கை வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம். இது கடும் கண்டனத்துக்குரியது.
இதில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு சொத்து வரி பெயர் மாற்றக் கட்டண உயர்வு குறித்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: நல்ல அரசு என்பது மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வதாக, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ்கள்,பத்திரங்கள், பெயர் மாற்றங்கள் போன்ற அரசின் நடைமுறைகள் குறைந்த கட்டணத்தில், எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதனால், சொத்துவரியை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications