சொத்து வரி.. பெயர் மாற்றம் செய்ய இனி கூடுதல் கட்டணம்.. அமலுக்கு வரும் புதிய நடைமுறை!
சென்னை: தமிழ்நாடு முழுக்க சென்னை தவிர மற்ற மாநகராட்சிகள் வருமானத்தை உயர்த்தும் விதமாக சொத்து வரி விவரத்தில் பெயர் மாற்றம் செய்ய கட்டணம் உயர்த்தப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தவிர மற்ற மாநகராட்சிகளில் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ளது.
சொந்தமாக வீடு வைத்து இருப்பவர்கள், நிலம் வைத்து இருப்பவர்கள் ஆகியோரிடம் இந்த சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. சொத்து வரி செலுத்துவதற்கான கடைசி தேதி ஒவ்வொரு வருடமும் மார்ச் 31 ஆகும்.

இந்த தேதிக்குள் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துமாறு மாநகராட்சி சார்பாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து இந்த சொத்து வரி வாங்கப்படும். வசதி கருதி இரண்டு கட்டமாக இந்த சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரி எவ்வளவு என்பதை https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோல் https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தைப் பக்கத்திலேயே சொத்து வரியும் செலுத்த முடியும். இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சியில், குறித்த நேரத்தில் சொத்துவரி செலுத்திய பொதுமக்களுக்கு ஊக்கத் தொகையாக கடந்த வருடம் மொத்தம் ₹8.57 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த வருடம் குறித்த காலத்திற்குள் ₹372.74 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
உயர்வு; இந்த நிலையில்தான் தமிழ்நாடு முழுக்க சென்னை தவிர மற்ற மாநகராட்சிகள் வருமானத்தை உயர்த்தும் விதமாக சொத்து வரி விவரத்தில் பெயர் மாற்றம் செய்ய கட்டணம் உயர்த்தப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தவிர மற்ற மாநகராட்சிகளில் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ளது.
முன்பு தமிழ்நாடு முழுக்க சொத்தில் பெயர் மாற்றம் செய்ய 500 - 1500 வரை கட்டணம் இருந்தது. இது தற்போது சொத்து அடிப்படையில் மாற்றப்பட்டு உள்ளது.
சொத்து மதிப்பு 5 லட்சம் ரூபாய் என்றால் - 1,000 ரூபாய்
சொத்து மதிப்பு 10 லட்சம் ரூபாய் என்றால் - 3,000 ரூபாய்
சொத்து மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்றால் - 5,000 ரூபாய்
சொத்து மதிப்பு 50 லட்சம் ரூபாய் என்றால் - 10000 ரூபாய்
சொத்து மதிப்பு 50 லட்சத்திற்கு மேல் என்றால் - 20000 ரூபாய்
என்று புதிய கட்டண முறை அமலுக்கு வர உள்ளது. சென்னை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.
உயர்வு: கடந்த 2022 வருடம் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150% வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
தமிழ்நாட்டில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்ட குழுவின் அறிக்கையானது அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications