வாசலில் காலங்காத்தாலே.. கோலம் போட்ட "பேரழகி".. கடைசியில் பார்த்தால்.. அந்த தெருவே மிரண்டு போச்சாமே
சென்னையில் இளம்பெண் ஒருவரை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்
சென்னை: இளம்பெண் ஒருவரை சென்னை போலீசார் பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.. என்ன காரணம்?
சமுதாயத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன... கல்வி, பணி போன்றவற்றுக்காக, சொந்த வீட்டை விட்டு வெளியே செல்லும் இடங்களில் எல்லாம், பெரும்பாலான பெண்கள் உடல் ரீதியாகவும், மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலை மாறும் என்று பார்த்தால், குடும்பத்துக்குள்ளும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பலவிதமான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்..

ஹீரோயின் சான்ஸ்
எனவே, எந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது... பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்து வருவதை மறுக்க முடியாது.. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து உள்ளே வைத்தாலும், அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள் பெருகி கொண்டேதான் இருக்கிறது.. குறிப்பாக, சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை சினிமா, டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைக்க பல கும்பல்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன..

நாசமா போச்சே
போலீசாரும் இதுபோன்ற கும்பலை பிடித்து ஜெயிலில் அடைத்தாலும் மறுபடியும் மறுபடியும் வேறு வேறு ரூபத்தில் அந்த கும்பல்கள் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.. இவர்களிடம் சிக்கி கொள்ளும் இளம்பெண்களின் எதிர்காலமே நாசமாகிவிடுகிறது.. நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்துள்ளது.. சென்னை நுங்கம்பாக்கம், ஜெயலட்சுமிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது...

வாசலில் கோலம்
இதன்பேரில் அந்த வீட்டை விபச்சார தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்... ஆனால், சந்தேகப்படும்படி யாருமே அங்கு சிக்கவில்லையாம்.. காரணம், அந்த வீட்டில் ஒரு பெண் இருந்துள்ளார். அவர் காலையில் தூங்கி எழுந்ததும், மஞ்சள் தேய்த்து குளித்து முடித்து வீட்டு வாசலில் கோலம் போடுவாராம்.. பிறகு, பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விழுந்து விழுந்து சாமி கும்பிடுவாராம்.. நிறைய விரதம் இருப்பாராம்.

விபச்சாரம்
கடைசியில் பார்த்தால், இந்த பெண்தான் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என்பது உறுதியானது.. பகலில் குடும்ப பெண் போல வேஷம்போட்டு, அக்கம் பக்கத்தினரை ஏமாற்றி, நைட் நேரத்தில் விபசாரத்தில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது... அதற்கு பிறகுதான் அந்த வீட்டில் சோலீசார் புகுந்து அதிரடி சோதனை நடத்தி, அந்த பெண்ணை மீட்டனர்.. விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக, குப்புராஜா, நதியன் என்ற 2 பேரையும் கைது செய்தனர்.. அந்த பெண்ணை மீட்ட பிறகுதான், இத்தனை நாளும் அவரது நிலைமையே அந்த பகுதியில் உள்ளோருக்கு தெரியவந்ததாம்..!!












Click it and Unblock the Notifications