சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று மாலை வரைதான் டைம்.. மருத்துவர்களுக்கு தமிழக அரசு காலக்கெடு.. அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி!

போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கடுமையான நிலைபாட்டை எடுத்துள்ளது. 4 கோரிக்கையை வைத்து போராட்டம் நடந்து வருகிறது.

அதன்படி போதுமான ஊதியம் கிடைக்கவில்லை, பதவி உயர்வு வழங்கப்படுவது இல்லை, காலி மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. முதல்வர் பழனிசாமி இந்த போராட்டத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.

 குழந்தை சுஜித்தை மீட்க ரூ.10 கோடி செலவா.. உண்மையில்லை.. நம்பாதீங்க.. திருச்சி ஆட்சியர் விளக்கம் குழந்தை சுஜித்தை மீட்க ரூ.10 கோடி செலவா.. உண்மையில்லை.. நம்பாதீங்க.. திருச்சி ஆட்சியர் விளக்கம்

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த போராட்டம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். அதில், அரசு வேண்டுகோளை ஏற்று 1550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்; போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களில் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பிவிட்டனர். 4683 பேரில் மீதமுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

விரைவில் நடவடிக்கை

விரைவில் நடவடிக்கை

3217 மருத்துவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதே மருத்துவ பணி. மக்களுக்காக பணிக்கு திரும்பிய பணியாளர்களுக்கு மிக்க நன்றி. மருத்துவமனை என்பது போராட்டக்களம் அல்ல.

காலக்கெடு

காலக்கெடு

இன்று மாலைக்குள் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.இன்று மாலைக்குள் வேலைக்கு திரும்பவில்லை என்றால் காலியிடங்களாக பணியிடங்கள் அறிவிக்கப்படும். மாலையிலிருந்து புது மருத்துவர்களை நியமிக்கும் பணி தொடங்கும். மாலைக்கு பின் புதிய அரசு மருத்துவர்களை நியமிக்கும் பணி வேகமாக நடக்கும்.

நோக்கம் என்ன

நோக்கம் என்ன

தண்டிப்பது எங்களின் நோக்கம் அல்ல, நாங்கள் மென்மையான போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். மருத்துவர்கள் மீது நாங்கள் இதுவரை கடுமையான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. அதனால் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

English summary
Protesting Doctors place will be replaced by new Doctors by evening says Minister Vijaya Baskar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X