சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரடங்கால் வீட்டுக்குள் அடிதடி அதிகமாயிடுச்சா.. கூலாக மனநல மருத்துவர் சுபா சார்லஸின் ஆஸம் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிற்குள்ளேயே இருப்பதால் தம்பதிகளுக்குள் மோதல் அதிகமாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த நேரத்தை கூலாக கழிக்க மன நல மருத்துவர் சுபா சார்லஸ் அட்டகாசமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

Recommended Video

    கணவன்-மனைவி , குடும்ப சண்டை அதிகமாகி விட்டதா? | Psychiatrist Advice | Part 2 |Oneindia Tamil

    உலகம் முழுக்க கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ், இதுவரை 200 நாடுகளுக்கும் மேல் பரவி மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ்க்கு பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.

    21 நாள் ஊரடங்கு

    21 நாள் ஊரடங்கு

    தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 239 பேர் இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை அறிவித்திருக்கிறது. கல்வி நிறுவனங்கள் உட்பட தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

    குடும்ப வன்முறை அதிகரிப்பு

    குடும்ப வன்முறை அதிகரிப்பு

    இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். குழந்தைகள் கணவர் என அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் வீட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கும் தாய்மார்களுக்கும் வேலைப்பளு அதிகரித்துள்ளது. ஆண்களும் வீட்டிலேயே இருப்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் கணவன், மனைவி, குழந்தைகள் இடை குடும்ப வன்முறை அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    கூலாக வைக்க டிப்ஸ்

    கூலாக வைக்க டிப்ஸ்

    வெளியே செல்ல முடியாததால் டிப்ரஷனுக்கு ஆளான குடும்பத்தினர் இடையே வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இந்த குடும்ப வன்முறைகளை தடுக்கவும் மனதை கூலாக வைக்கவும் மனநல மருத்துவரான சுபா சார்லஸ் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

    அதற்கான நேரம்

    அதற்கான நேரம்

    அவர் கூறியிருப்பதாவது, நெருக்கமாக இருக்கும் போது பிரச்சனைகள் அதிகமாவது இயல்பானதுதான். ஆனால் அந்த மனநிலையை மாற்ற வேண்டும். இந்த நேரம் ஒன்றாக சாப்பிட்டு, தூங்கி மகிழ்ச்சியாக கழிக்க வேண்டிய நேரம். இதுவரை எல்லோரும் அவரவர் வேலை என பிரிந்துதான் இருந்தோம்.

    குறைத்துக் கொள்ளுங்கள்

    குறைத்துக் கொள்ளுங்கள்

    எல்லோரும் அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருந்தனர். இப்போது அப்பா ரிலாக்ஸாக இருப்பார். அம்மாவும் மெல்ல எழுந்து மெதுவாக வேலைகளை செய்து வருவார். ஆனால் அம்மாக்களின் வேலைப்பளு அதிகமாகிவிட்டது. அம்மாக்கள் தாங்களாகவே தங்களின் வேலைப்பளுவை குறைத்துக் கொள்ள வேண்டும். விதவிதமாக சமைக்காதீர்கள், இனிப்புகளை சமைக்க வேண்டாம்.. அது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

    காதுக்கு பின்னால்..

    காதுக்கு பின்னால்..

    இப்போது எளிமையான உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டிய தருணம். வயிற்றில் லோடு சேர்க்காதீர்கள். புளித்த உணவுகளை சாப்பிடுங்கள், அது வயிற்றும் மனதுக்கும் ரிலாக்ஸை தரும். டென்ஷன் அதிகமாகும் போது காதுக்கு பின்னால் கழுத்தில் உள்ள நரம்பை தடவி விடுங்கள் டென்ஷன் குறையும். கவலை, பயம், வெறுப்பு எல்லாம் குறைந்து ரிலாக்ஸாகி விடும் என்றார்.

    பயந்து இருக்க வேண்டும்

    பயந்து இருக்க வேண்டும்

    மேலும் வீட்டிற்குள் அடங்கி இருக்க முடியாதவர்களுக்கும் ஆலோசனை வழங்கியிருக்கிறார் சுபா சார்லஸ், தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று வெளியே வரக்கூடாது. ஆர்வக் கோளாறில் வெளியே சுற்றுவது பயனளிக்காது. எப்போது பயப்பட வேண்டும் எப்போது பம்ம வேண்டும் என்று உள்ளது. எப்போது பாய்ந்து தாக்க வேண்டும் எப்போது பயந்து இருக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

    பயந்து பதுங்கியிருங்கள்

    பயந்து பதுங்கியிருங்கள்

    இதுவரை வெளி உலகத்தை பார்த்தீர்கள், இப்போது உங்கள் உலகத்தை பாருங்கள். நீங்களே ஒரு பெரிய உலகம். உங்களை பாருங்கள், படியுங்கள். இளைஞர்கள் எதைப்பற்றி படிக்க விரும்புகிறீர்களோ அதை படியுங்கள். வெளியே போகாதீர்கள், சட்டங்களை மதியுங்கள். இப்போது பயந்து பதுங்கி வீட்டில் இருங்கள் அப்போதுதான் பிறகு பாய முடியும். இவ்வாறு கூறியிருக்கிறார் சுபா சார்லஸ்.

    English summary
    Psychiatrist Subha Charlous gives advice how to reduce domestic quarrels in Quarentine time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X