Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறித்தனமான செக்ஸ் சிந்தனைகள்.. மனநல மருந்து எடுப்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்து! வெளியான ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனநல மருந்து எடுத்துக்கொண்ட இளம் பெண்ணுக்கு ஹைப்பர்செக்ஸ் (hypersexuality) என்கிற அதீத பாலியல் சிந்தனை உணர்வு ஏற்பட்டிருப்பதை மருத்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே மனநல மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள், தங்கள் உணர்வு நிலையில் மாற்றங்கள் தெரிந்தால் உடனே மருத்துவர்களை அணுகுங்கள்.

tamil nadu medical

'Journal of Psychosexual Health' எனும் இதழில் இது தொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், 25 வயது பெண் ஒருவர் மனநல மருத்துவரை அணுகியுள்ளார். இவருக்கு சமீபத்தில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால், இவரால் வீட்டு வேலைகளையும், குழந்தை பராமரிப்பையும் சரியாக செய்ய முடியவில்லை. காரணம், இவரது கணவருக்கு திருமணம் தாண்டிய உறவு இருந்திருக்கிறது. இப்பெண் அதை கண்டுபிடித்துவிட்டார்.

அப்போது முதல் இவரால் இயல்பாக இருக்க முடியவில்லை. அடிக்கடி தற்கொலை எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. இரவு முழுவதும் அழுது புலம்பியிருக்கிறார். தூக்கம் இல்லாததால் மனநிலை மிக கடுமையாக பாதிக்கப்பட்டு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து வேறு வழியில்லாமல் மனநல மருத்துவரை அணுகியுள்ளார். இவருக்கு 'தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறுபயன்பாட்டு தடுப்பான்' (Selective Serotonin Reuptake Inhibitors - SSRIs) மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

செரோடோனின் என்பது மூளையிலிருந்து வெளிவரும் ஒரு ரசாயனமாகும். மனநிலையை சீராக வைத்திருக்கவும், பதற்றம் இல்லாமல் வைத்திருக்கவும் இந்த வகை மருந்துகள் பயன்படுகின்றன. மூளையிலிருந்து வெளிவரும் இந்த ரசாயனத்தை நரம்புகள் இழுத்துக்கொள்ளும். நம்மை போன்ற சாதாரண ஆட்களுக்கு இது பிரச்சனை இல்லை. ஆனால் பதற்றமாக இருப்பவர்கள், மனச்சோர்வு, மன அழுத்தம் கொண்டவர்களுக்கு இது சிக்கல். எனவே, மூளையிலிருந்து வெளிவரும் செரோடோனின் ரசாயனத்தை தக்க வைப்பது அவசியம்.

இதற்காகத்தான் SSRIs மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் மன அமைதி ஏற்படும், மன அழுத்தமும் குறையும். ஆனால் இந்த மருந்தை எடுத்த பிறகு இளம்பெண்ணின் செக்ஸ் உணர்வுகள் உச்ச கட்டத்தை தொட்டிருக்கின்றன. ஒரு நாளில் பல முறை செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. கணவன் முறையற்ற உறவில் இருப்பது தெரிந்திருந்தாலும் கூட தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள இந்த பெண் கட்டாயப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தால் ஆட்டுவிக்கப்பட்ட இளம்பெண், சில சிக்கலையும் எதிர்கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் இவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்ததுதான். தொடக்கத்தில் 5 மி.கி என இருந்த மருந்தின் அளவு 15 மி.கி என அதிகரித்திருக்கிறது.

15 மி.கி மருந்து எடுக்கப்பட்ட பின்னர் அன்றைய நாள் முழுவதும் தனிமையில் கழிக்க வேண்டும் என்று இளம் பெண்ணுக்கு தோன்றியிருக்கிறது. எனவே தனிமையை தேடி அலைந்திருக்கிறார். தனிமையில் இருக்கும்போது பாலியல் விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறார்.

இது, இவரை மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. உடல் சோர்வு அதிகமாக அன்றாட வேலைகளில் கூட இவரால் கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கிறது. தற்கொலை எண்ணமும் அதிகமாகியுள்ளது. எனவே இவர் இந்த மருந்தை எடுப்பதை நிறுத்தியுள்ளார். மருத்துவரை அணுகியபோது, இவருக்கு வேறு ஒரு மாற்று மருந்து பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இப்போது இளம்பெண்ணுக்கு எந்த சிக்கலும் எழவில்லை.

மன அழுத்தத்தை போக்க எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் சில பக்கவிளைவுகள் இருக்கத்தான் செய்யும். எனவே, பக்கவிளைவுகள் தெரிந்தால் உடனே மருத்துவர்களை அணுகுவது சிறந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+