"அதை" மட்டும் குறி வைத்து அறுக்கும் சைக்கோ கொலையாளி.. அலறும் சென்னை!
Recommended Video
சென்னை: வட சென்னை கடந்த சில தினங்களாக தூக்கத்தை தொலைத்திருக்கிறது. காரணம் ஆண்களை குறிவைத்து அதுவும் அவர்களின் முக்கிய உறுப்பை குறிவைத்து அறுக்கும் கொலைகாரனால்தான். பாலத்திற்கு அடியில் படுத்திருக்கும் ஆண்கள்தான் அந்த கொலைகாரன் அல்லது கொலைகாரியின் டார்கெட் ஆக இருக்கிறது. ஏன் எதற்காக இப்படி கொலைகள் நடக்கிறது என்று காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சினிமாவில் பாலியல் பலாத்காரம் செய்தவனை பழிவாங்க கொலை செய்வது போல கதை அமைத்திருப்பார்கள். அந்தரங்க உறுப்பை அறுத்து தூக்கி எறிவது போல சீன் அமைத்திருப்பார்கள். சமீபத்தில் நடந்த கள்ளக்காதல் கொலைகள் கூட அதே போல நிகழ்ந்துள்ளது.
வட சென்னையில் அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் குடி போதையில் படுத்திருந்த ஆண்களின் அந்த உறுப்புகள் அறுக்கப்பட்டு அவர்கள் மரணமடைய காரணமாகியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் மரணம்
இரு தினங்களுக்கு கொளத்தூர் பாலத்தின் அருகில் படுத்திருந்த நபர் வலியில் துடித்துக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கொலையாளி யார்
போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபரின் பெயர் அஸ்லாம் என்பதும் அவர் கொளத்தூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இது தற்கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்ட நிலையில் அஸ்லாமின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டிருந்தது. ஆணுறுப்பை அறுத்துக்கொண்டு போனது யாராக இருக்கும் என்று காவல்துறையினர் யோசிக்கத் தொடங்கினர்.

குறி வைப்பது யார்
அப்போதுதான் மாதவரத்தில் இதே போல ஒரு நபரின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மாதவரத்தில் வசித்து வந்த நாராயணன் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த போதுதான் அவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஒரே எதிரியா?
அடுத்தடுத்து ஒரே மாதிரியான சம்பவங்கள் நடந்திருப்பது போலீசாரின் தூக்கத்தை பறித்துள்ளது. நாராயணனும், அஸ்லாமும் ஒரே மாதிரி தாக்கப்பட்டுள்ளனர். சைக்கோ கொலையாளி யாராவது சுற்றித் திரிகிறார்களா? அல்லது அஸ்லாம், நாராயணன் ஆகிய இருவருக்குமே தெரிந்த கொலையாளியா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வட சென்னையில் சம்பவம்
இந்நிலையில், மாதவரம் பகுதியில் நாராயணன் என்பவரும் மயங்கிய நிலையில் கிடக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின்னரே போலீசார் தீவிரத்தை உணர்ந்து கொண்டனர்.
போதை மயக்கத்தில் கிடக்கும் ஆண்களின் அந்தரங்க உறுப்பு குறி வைத்து வெட்டப்படுவதால் கொளத்தூர், மாதவரம் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications