பிராண்டிய புலி..IT ரெய்டு! ஒரே படத்தில் PT செல்வகுமாரின் சோலியை முடித்த விஜய்! திமுகவில் சேர காரணம்?
சென்னை: நடிகர் விஜயின் முன்னாள் பிஆர்ஓவும் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் திரையுலகில் செல்வாக்கோடு வலம் வந்த அவர் புலி படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டத்தால் திரை துறையில் இருந்தே ஒதுங்கினார். மேலும் புலி படத்தின் ரிலீஸ்க்கு முதல் நாள் இன்கம்டேக்ஸ் ரெய்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது
நடிகர் அஜித்துக்கு சுரேஷ் சந்திரா போல, நடிகர் விஜய்க்கு பிஆர்ஓவாக இருந்தவர் பீடி செல்வகுமார்.25 ஆண்டு காலம் விஜயின் நிழல் போலவே பயணித்தவர். 2003 ஆம் ஆண்டு விஜய்க்கு மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்ற தொடங்கியவர் பல ஆண்டுகள் விஜய் உடன் பயணித்தார்.
மேலும் விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தையும் பிடி செல்வகுமார் தான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக செயல்பட்டு வந்த பிடி செல்வகுமார் இன்று திடீரென திமுகவில் இணைந்திருக்கிறார்.

பிடி செல்வகுமார்
விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்கியவர்களின் முக்கிய பங்கு வகித்தவர் பிடி செல்வகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உரிய அங்கீகாரம் இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர் திமுகவில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. புலி படத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது திமுகவில் இணைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் பிஆர்ஓ
கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய், ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, பிரபு கிச்சா சுதீப் என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த படம் புலி. சிம்புதேவன் எழுதி இயக்கிய இந்த படத்தை பிடி செல்வகுமார் தான் தயாரித்திருந்தார். வழக்கமாக காதல் ஆக்சன் என நடித்து வந்த விஜய் குழந்தைகளுக்காக ஃபேண்டஸி கதைக்களத்தில் நடித்திருந்தார். ஆனால் குழந்தைகளை கவர்ந்தாலும் வெகுஜன ரசிகர்களை இந்த படம் கவரவில்லை. இதனால் படம் படுதோல்வியை சந்தித்தது.
புலி சர்ச்சை
பிரம்மாண்ட செட்டுகள், விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்காக படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாய் வரை சென்றதாக சொல்லப்படுகிறது. படம் முதல் வாரத்திலேயே 71 கோடி ரூபாயை வசூல் செய்தாலும் நாட்கள் செல்ல செல்ல படத்தின் வசூல் மோசமான விமர்சனங்களால் கடுமையாகச் சரிந்தது. இரண்டாவது வாரத்தில் அதில் நான்கில் இரு பங்கைக் கூட கலெக்ட் செய்ய முடியவில்லை. மொத்தத்தில் இந்த படம் 85 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
ஐடி ரெய்டு
மேலும் படத்தின் ரிலீசுக்கு முதல் நாள் இன்கம்டேக்ஸ் ரெய்டு வந்தது. இதனால் படம் ரிலீஸ் ஆகாது என செய்திகள் வெளியான நிலையில் பல விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க முன் வரவில்லை. இதுவும் பிடி செல்வகுமாருக்கு ஒரு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. ஆனால் தொடர்ந்து அமைதியாக இருந்த செல்வகுமார் பல ஆண்டுகளுக்கு பெருந்தகை இந்த விவகாரம் குறித்து பேசி இருந்தார். "27 வருட உழைப்பு ஒரே திரைப்படத்தில் சுக்ககுநூறு ஆக்கப்பட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சினிமா அரசியல்
உழைத்து முன்னேற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் வாழ்ந்த எனது படம் ரிலீஸ் ஆகாது என்று சொன்னார்கள். எனது சொத்துக்களை விற்றாவது படத்தை ரிலீஸ் செய்வேன் என சொல்லி படத்தை பல பிரச்சனைகள் கடந்து ரிலீஸ் செய்தேன். ஆனால் படம் அட்டார் பிளாப் ஆனது. வேறு யாராவது இருந்திருந்தால் கண்டிப்பாக தற்கொலை தான் செய்திருப்பார்கள். அந்தப் படத்துக்கு விஜய் 25 கோடி சம்பளம் வாங்கினார். அடுத்த படத்தில் 45 கோடி சம்பளம் வழங்கப்பட்டது .ஆனால் என்னை துரோகி என சொல்லிவிட்டார்கள்" என பிடி செல்வகுமார் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி!












Click it and Unblock the Notifications