Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டெல்லி" பறந்த மெசேஜ்.. பாஜகவை புரட்டி எடுக்கிறாரா பிடிஆர்?.. நறுக்குன்னு "கேரக்டர்" சொன்ன வானதி..!

நிதியமைச்சர் பிடிஆரை, பாஜகவின் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிடிஆரை, சரமாரியாக விமர்சித்து, பாஜகவின் வானதி சீனிவாசன் பேட்டிகளை தந்துள்ளார்.. மேலும், கடந்த சில நாட்களாகவே முன்பைவிட, நிதியமைச்சர் பிடிஆர் மீதான கடுப்பும், எரிச்சலும் பாஜகவுக்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Recommended Video

    PTR | பாஜகவுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பதிலடி

    ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு போன்ற நிதி சார்ந்த விஷயங்களில், சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசை, கடுமையாகவும், அதேசமயம் ஆதாரப்பூர்வமாகவும் விமர்சித்து வருகிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

    பிடிஆரின் இந்த விமர்சனங்களுக்கு, மத்திய நிதியமைச்சர் நி்ர்மலா சீதாராமனும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பதிலடி தந்தே வருகிறார்..

     நிர்மலா + கடுப்பு

    நிர்மலா + கடுப்பு

    ஆனாலும், மத்திய நிதியமைச்சருக்கும், மாநில நிதியமைச்சருக்கும், இந்த கருத்து மோதல்கள் அடிக்கடி வெடித்து கிளம்புவது வழக்கமான ஒன்றாக பதிந்துபோய்விட்டது.. அதேசமயம், பிடிஆர் மீதான கடுப்பும் எரிச்சலும் பாஜகவினருக்கு அதிகமாகிவிட்டதாகவே கருதப்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே, கடந்த வாரம் மதுரை செருப்பு வீச்சு சம்பவம் நடந்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே, பிடிஆரின், இலவசங்கள் குறித்து இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டி இன்னொரு பரபரப்பை கிளப்பிவிட்டது.

     அட்வைஸ், பர்மிஷன்

    அட்வைஸ், பர்மிஷன்

    "எங்களுக்கு அட்வைஸ் செய்பவர்களுக்கு, சட்டரீதியான அனுமதி இருக்க வேண்டும்.. ஒருவேளை உங்களுடைய சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அட்வைஸ் சொல்லலாம்... அல்லது, இருக்கிற கடனை எல்லாம் அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தையும் நிமிர்த்தி விட்டீர்கள், தனிநபர் வருமானத்தையும் உயர்த்திவிட்டீர்கள் என்றால், உங்க பேச்சை நாங்கள் கேட்கலாம்... இப்படி எதுவுமே இல்லாதபோது உங்க பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்? என்று பிடிஆர் கேட்டது, டெல்லி மேலிடம்வரை எதிரொலித்தது.

     டாக்டர் பட்டம்

    டாக்டர் பட்டம்

    ஏற்கனவே கடுப்பில் இருந்த பாஜக, இலவசங்கள் தொடர்பாக மத்திய அரசை சீண்டி, இந்த பேட்டியை தரவும் மேலும் ஆவேசமாகிவிட்டது.. "மெத்த படித்தவர், டாக்டர் பட்டம் பெற்ற ஆணவம், அகங்காரம், பொருளாதாரத்தை புரிந்து கொள்ளாத அறியாமையின் வெளிப்பாடு, முனைவர் பட்டம் பெற்றுள்ளீர்களா? அல்லது நோபல் பரிசு பெற்றுள்ளீர்களா? எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும், யாரிடமும் ஆலோசனை பெற அவசியமில்லை என்று சொல்லும் திமிர் பேச்சு" என்பன உட்பட பல்வேறு வார்த்தை பிரயோகங்களை வைத்து, பிடிஆரை கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறது தமிழக பாஜக..

     திருப்பதி நாராயணன்

    திருப்பதி நாராயணன்

    வெளிநாடுகளில் 2 கம்பெனிகளில் திவாலாக்கி விட்டு, இங்கு வந்தும் இந்த அரசை திவாலாக்கி கொண்டிருக்கிறார் என்றும் பிடிஆர் மீது குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்பி உள்ளன.. முதலில் எச்.ராஜா இந்த புகாரை செய்தியாளர்களிடம் கூறினார்.. அடுத்து மாநில தலைவர் அண்ணாமலை.. அடுத்து திருப்பதி நாராயணன், அண்ணாமலை, அடுத்து வானதி சீனிவாசன் என அடுத்தடுத்து பிடிஆரை கேள்வி கேட்டும், பேட்டிகளை தந்தும் வருகிறார்கள்..

    "கேரக்டர்"

    நேற்றைய தினம் வானதி சீனிவாசன் பேசும்போது, "எவ்வளவுதான் ஆக்கப்பூர்வமாக விமர்சனங்களை நாங்கள் முன்வைத்தாலும், இந்த மாநிலத்தின் நிதியமைச்சர், அதுவும் நிதியமைச்சர் என்ற பொறுப்புக்கு சற்றும் பொருத்தமில்லாதவர், கீழ்த்தரமான விமர்சனங்களை திணித்து வைக்கிறார்.. நான் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன், நான் இப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன், 3ம் தலைமுறை, 4ம் தலைமுறை என்று பெருமை பேசும் அவரது "கேரக்டர்" எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்" என்று வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே ஆவேசமாகி உள்ளார்.

     வானதி எரிச்சல்

    வானதி எரிச்சல்

    நான் வெளிநாட்டில் படித்தவன்.. வெளிநாட்டில் டிகிரி வாங்கியிருக்கேன்.. உங்களுக்கு பெரிய படிப்பறிவு இருக்கிறதா? நீங்க எல்லாம் மத்திய அரசில் நோபல் பரிசு வாங்கினீர்களா? என்று பிடிஆர் சொல்கிறாரே.. அவர் ஏன் அப்படி சொல்கிறார் என்றால், அவர் இந்த மாநில முதல்வரை மறைமுகமாக விமர்சனம் செய்கிறார்" என்று திடீரென ஸ்டாலினுடன் கோர்த்துவிட்டு, புது விளக்கத்தையும் தந்துள்ளார் வானதி.. அந்தவகையில், பிடிஆர் மீதான கோபம், பாஜகவுக்கு அதிகமாகி உள்ளதாகவே தெரிகிறது.

     நிர்மலா ஷாக்

    நிர்மலா ஷாக்

    அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் உரிமை, கூட்டாட்சி முறை தொடர்பாகவும், மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கைகள் பற்றியும், விலாவரியான பாயிண்ட்டுகளுடன், புள்ளிவிவர தரவுகளை எடுத்துவைத்த பிடிஆரை பார்த்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே அதிர்ந்துபோனார். அதுமட்டுமல்ல, பாஜக நிர்வாகிகளையும் விட்டு வைக்காமல் இவரது சரவெடிகள், அக்கட்சியை மேலும் கலங்கடித்து வருவதாக கூறப்படுகிறது.. இந்து சன்னியாசிகளை பற்றி பேசினால் அவர்களின் பின்னணி குறித்து நோண்டப்படும் என்று பிடிஆர் அன்று போட்ட ஒரே போடு, மொத்த டெல்லியையும் உற்றுபார்க்க வைத்தது.

     கூடாரம்

    கூடாரம்

    அப்போது முதல் இப்போதுவரை, யாரிடமும் பிடிஆர் காம்ப்ரமைஸ் ஆகவில்லை.. முன்பைவிட மத்திய அரசின் குறைபாடுகளை சொல்லி வெளிப்படையாகவே குரல் கொடுத்து வருகிறார்.. எனவே, "பாஜகவை புரட்டி எடுக்க வந்துவிட்டார் பிடிஆர்.. ஒவ்வொன்றுக்கும் தக்க பதிலடிகளை, அதிலும் புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுத்து வருவதால் பாஜக அரசு திண்டாட ஆரம்பித்துவிட்டது" என்று திமுகவினர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.. உண்மையிலேயே பாஜக கூடாரம் வெலவெலத்து போயுள்ளதா? அல்லது விரைவில் பிடிஆருக்கு, தக்க புள்ளிவிவர பதிலடிகளை தரப்போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+