கரிநாளில் பட்ஜெட் உரை..எம கண்ட நேரத்தில் சூப்பர் அறிவிப்பு.. நல்ல நேரம் பார்க்காத நிதியமைச்சர்!

திங்கட்கிழமையான இன்றைய தினம் கரிநாளில் நல்ல நேரத்தில் ஆரம்பித்து எமகண்ட நேரத்தில் பட்ஜெட் உரையை தாக்கல் செய்து மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கையை திங்கட்கிழமையான இன்றைய தினம் மாத சிவராத்திரி நாளில் நல்ல நேரத்தில் வாசிக்க ஆரம்பித்து எமகண்ட நேரத்தில் தாக்கல் செய்துள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இன்றைய தினம் கரிநாள் என்றும் காலண்டரிலும் பஞ்சாங்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்ல நாள், நேரம் பார்க்காமல் மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர்.

பொதுவாக கரிநாளில் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். இன்றைய தினம் 2022-23ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை நிறைந்த பவுர்ணமி நாளான பங்குனி உத்திரம் நாளில் தாக்கல் செய்தார். இன்றைய தினம் அமாவாசைக்கு முதல்நாளில் சதுர்த்தசி நாளில் சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

திருக்குறள்

திருக்குறள்

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3வது பட்ஜெட் ஆகும். அவர் தனது உரையை திருக்குறளுடன் தொடங்கினார்.

கொடையளிசெங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணைகாட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக்காப்பதே ஓர்அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும் என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அவர் சட்டசபையில், நாட்டுக்கு எது அழகு என்ற திருக்குறளை வாசித்தார்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை வாசித்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்.
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும் என்பது இத் திருக்குறளின் விளக்கமாகும்.

அரசன் யார்?

அரசன் யார்?

கடந்த 2021ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார். பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன் என்பது இதன் பொருளாகும்.

எமகண்ட நேரத்தில் முடித்த பிடிஆர்

எமகண்ட நேரத்தில் முடித்த பிடிஆர்

இன்றைய தினம் பட்ஜெட் உரையை 2 மணி நேரம் வாசித்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன். திங்கட்கிழமை பொதுவாக காலை 9 மணி முதல் 10.30 மணிவரை நல்ல நேரமாகும். 10.30 மணிக்கு மேல் எமகண்டம் ஆரம்பித்து விடும் 12 மணி வரை எமகண்டமாகும். பிடிஆர் பழனிவேல் ராஜன் தனது பட்ஜெட் உரையை நல்ல நேரத்தில் ஆரம்பித்து எமகண்ட நேரத்தில் வாசித்து முடித்தார். தமிழ்நாட்டு இல்லத்தரசிகள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000

சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை - சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு. மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம்.

மகளிருக்கு உரிமைத் தொகை

மகளிருக்கு உரிமைத் தொகை

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள்.மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை. இத்தகைய புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

மத்திய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும்

1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். கருணாநிதி அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில்,செப்டம்பர் மாதத்தில், அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.

சூப்பர் அறிவிப்பு

சூப்பர் அறிவிப்பு

தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். பொதுவாக நல்ல நேரம், நல்ல நாள் பார்த்துதான் எந்த காரியங்களையும் செய்வார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கரிநாளான இன்றைய தினம் பட்ஜெட் உரையை வாசித்து மிக முக்கியமான அறிவிப்பினை எமகண்ட நேரத்தில் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+