ஏன் அப்படி சொன்னார்? பிடிஆரின் மறைமுக டார்கெட்டே"முதல்வர்தான்".. கொளுத்தி போட்ட வானதி! கவனிச்சீங்களா
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் செய்வதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சமீபத்தில் இலவச திட்டங்கள் குறித்து வடஇந்திய ஊடகங்களில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது நாடு முழுக்க கவனம் பெற்றது. அவர் தனது பேச்சில், எங்களுக்கு அறிவுரை சொல்பவர்களுக்கு முதலில் சட்ட ரீதியான அனுமதி இருக்க வேண்டும். உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லலாம்.
நீங்கள் கடனை அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தை சரி செய்துவிட்டீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?, என்று குறிப்பிட்டார்.

இலவசங்கள் '
இலவசங்களை கொடுக்க கூடாது என்று எங்காவது சட்டத்தில் சொல்லி இருக்க வேண்டும். அது இல்லை. அல்லது இப்படி சொல்பவர்கள் துறை வல்லுனர்களாக இருக்க வேண்டும். அதாவது பொருளாதார நோபல், பிஎச்டி.. அல்லது இந்த துறைகளில் நீங்கள் எங்களை விட சிறந்தவர் என்று சொல்வதற்கான ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்படி இதை செய்ய கூடாது என்று சொல்ல முடியும். ஆனால் தமிழ்நாடு அரசிடம் இதெல்லாம் இருக்கிறது, என்று பிடிஆர் குறிப்பிட்டு இருந்தார்.

நோபல்
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ பிடிஆரை விமர்சனம் செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலினைதான் மறைமுகமாக விமர்சனம் செய்கிறார். நான் வெளிநாட்டில் படித்து இருக்கிறேன். நான் வெளிநாட்டில் டிகிரி வாங்கி இருக்கிறேன். உங்களுக்கு பெரிய படிப்பு அறிவு இருக்கிறதா? நீங்க எல்லாம் மத்திய அரசில் நோபல் பரிசு வாங்கினீர்களா?

மறைமுக விமர்சனம்
நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும். நான் நிதி அமைச்சர் . நீங்கள் வெளிநாட்டில் எல்லாம் படித்துவிட்டு வந்தீர்களா? உங்களிடம் நான் ஏன் அறிவுரை கேட்க வேண்டும் என்று பிடிஆர் சொல்கிறார். அவர் ஏன் அப்படி சொல்கிறார் என்று என்னிடம் கேட்டீர்கள் என்றால்.. அவர் மாநில முதல்வர் ஸ்டாலினுக்கு மறைமுகமாக விமர்சனம் வைக்கிறார் என்று நான் பார்க்கிறேன். அவர் முதல்வரை மறைமுகமாக விமர்சனம் செய்கிறார் .

என்ன செய்தி
அவர் சொல்ல வரும் செய்தி என்ன? நோபல் பரிசு வாங்கியவர்கள்தான் ஆட்சி நடத்தணும். அவர்கள்தான் மக்களை பற்றி கவலைப்பட வேண்டும். அவர்கள்தான் நலத்திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்கிறார். அப்படி என்றால் மற்றவர்கள் யார்? முதல்வர் ஸ்டாலின்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். பிடிஆர் மறைமுகமாக விமர்சனம் செய்வதே முதல்வர் ஸ்டாலினைதான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications