Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிடிஆர் டேப் 1 மணி நேரம் இருக்கு! ரூ.1461 கோடிக்கு என்மேல கேஸ் இருக்கு! அண்ணாமலை கிளப்பிய புது புயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிடிஆர் டேப்பை ரிலீஸ் செய்ததற்காக நீங்கள் என் மீது மீண்டும் இன்னொரு வழக்கு போடுங்கள். பிடிஆர் டேப் 1 மணி நேரம் இருக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து திமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார்.

அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மீதும் சில புகார்களை அண்ணாமலை பிரஸ் மீட்டில் அவர் வைத்தார். திமுக மீது சரமாரி புகார்களை வைத்தார்.

PTR Palanivel Thiagarajan tape has more than 1 hours of recording says Annamalai after cabinet change

திமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு என்றும் சிலவற்றை காட்டினார். இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச்செயலார் ஆர்எஸ் பாரதி அளித்த பதிலில், அண்ணாமலைக்கு 15 நாட்கள் அவகாசம் , அதற்குள் திமுக சொத்துக்கான பத்திரங்களை வெளியிடுங்கள் என்று என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி சவால் விடுத்து உள்ளார்.

இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுகவின் டாப் தலைவர்கள் அடுத்தடுத்து மான நஷ்ட வழக்கு தொடுத்து வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சமீபத்தில் திமுக மூத்த எம்பி, மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தன்னை பற்றி பரப்பிய வதந்திக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் .

சொத்துக்கள் குறித்து பரப்பிய வதந்திக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் 100 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு எதிராக இன்று டி ஆர் பாலு சார்பாக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

அண்ணாமலைக்கு எதிராக அதிகாரபூர்வமாக தொடுக்கப்படும் 3வது மான நஷ்ட வழக்கு ஆகும் இது. அதேபோல் ஆர்எஸ் பாரதி சார்பாகவும் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

ஆர்எஸ் பாரதி வழக்கு இல்லாமல் அண்ணாமலை மீது மேலும் சில வழக்குகள் பதியப்படும் என்று கூறப்படுகிறது. சொத்து பட்டியல் விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு விதித்து அமைச்சர் உதயநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரூ 2039 கோடி சொத்து சேர்த்ததாக ஒரு அவதூறு தகவலை தெரிவித்துள்ளீர்கள்

அதற்கு ஆதாரம் இருந்தால் காட்ட வேண்டும். இல்லையென்றால் நிபந்தனையற்ற மன்னிப்பை அண்ணாமலை அடுத்த 48 மணி நேரத்திற்குள் கேட்க வேண்டும். இல்லையெனில் ரூ 50 கோடி நஷ்ட ஈட்டை கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

PTR Palanivel Thiagarajan tape has more than 1 hours of recording says Annamalai after cabinet change

அண்ணாமலை: தனக்கு எதிராக தொடுக்கப்பட்டு உள்ள வழக்குகள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு எதிராக திமுகவினர் பலரும் வழக்கு தொடுத்து உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கூட எனக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். முதல்வரை சேலஞ்ச் செய்கிறேன். நீங்களும் குற்றம் செய்துள்ளீர்கள். பிடிஆர் இதைத்தான் சொல்கிறார்.

அரசு துறையை பயன்படுத்தி.. பிடிஆர் டேப்பை ரிலீஸ் செய்ததற்காக நீங்கள் என் மீது மீண்டும் இன்னொரு வழக்கு போடுங்கள். பிடிஆர் டேப் 1 மணி நேரம் இருக்கிறது. நீங்கள் பிடிஆர் பைல்ஸ் பற்றி கேஸ் போடுங்கள். அது எல்லாம் கோர்ட்டில் வெளியே வரட்டும். இங்கே பிடிஆர் தவறு செய்யவில்லை. தப்பு செய்தவரை பற்றி பேசி இருக்கிறார். அதை பற்றி கோர்ட் பேச வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், எம்பி டி ஆர் பாலு, கனிமொழி, முன்னாள் எம்பி ஆர்எஸ் பாரதி என்று வரிசையாக எனக்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளனர். அவர்கள் மாறி மாறி வழக்கு தொடுத்து உள்ளனர்.

பல கோர்ட்டுகளில் அவர்கள் எனக்கு எதிராக அவதூறு வழக்கு போட்டுள்ளனர். 1461 கோடி ரூபாய்க்கு என் மீது வழக்கு போட்டுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இப்படி நடந்ததே இல்லை. இந்திய வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.

அவர்கள் தந்தை பாஜகவே எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள்., பாஜக இங்கொன்று அங்கொன்றும் இருப்பதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கிண்டலாக சொன்னார். இப்போது அவர்கள் போட்டு இருக்கும் அவதூறு வழக்கு போட்டுள்ளதை பாருங்கள். பாஜக அங்கேதான் இருக்கும். இதுதான் பாஜகவின் வலிமையை காட்டுகிறது.

PTR Palanivel Thiagarajan tape has more than 1 hours of recording says Annamalai after cabinet change

நீங்கள் 1461 கோடி ரூபாய்க்கு வழக்கு போடும் அளவிற்கு நாங்கள் முன்னேறி உள்ளோம் என்று காட்டுகிறது. திமுக பைல்ஸ் பார்ட் 2 ஜூலை மாதம் வரும். நீங்கள் அவதூறு வழக்கு போடுவதால் நாங்கள் அஞ்ச மாட்டோம். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

இந்த முறை புதிய அமைச்சர்கள் மீது புகார்கள் வைக்கப்படும். விரைவில் பார்ட் 2 வரப்போகிறது. அப்போது பல உண்மைகள் வரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+