பள்ளிகள் திறக்கும் நிலையில்.. அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் செய்த அலட்சியப்போக்கு.. பெற்றோர் கண்டனம்
சென்னை: அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடந்ததை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் பல்வேறு விழிப்புணர்வுகளையும், விதிகளையும் கடைபிடிக்க அறிவுறுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர்
இந்நிலையில் நேற்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்துார் ஒன்றியம், எறையாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவரின் வீட்டு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. கொரோனா 3 வது அலை குறித்து சுகாதாரத் துறை எச்சரித்து வரும் வேளையில் எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் அரசு பள்ளி வளாகத்தில் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

அதிருப்தி ஏற்படுத்திய சம்பவம்
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பள்ளிகளையும் தூய்மை செய்யும் பணி மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற தனி நபர் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்த அப்பள்ளி தலைமை ஆசிரியரின் அலட்சியப்போக்கு பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வகுப்புகள்
அந்த பள்ளியை மீண்டும் தூய்மை செய்த பிறகே மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க வேண்டும் என அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் தனி நபருக்காக அரசுப் பள்ளியில் விழா நடத்த எப்படி தலைமை ஆசிரியர் அனுமதிக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடவடிக்கை
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் விசாரணை நடத்தி உரிய தண்டனையை தர வேண்டும். இது போல் பொது சொத்துகளை அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பது தவறு செய்யும் மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும். அது போல் விழா நடத்திய தனிநபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications