ஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹோட்டல் பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதால் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக யூடியூப் சேனல் தொடங்கலாம் என ஐடியா கொடுத்தவரே என் மனைவி கிருத்திகாதான் என பப்ஜி மதன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பப்ஜி விளையாட்டில் ஈடுபட்ட மதன் அந்த விளையாட்டு மூலம் சிறுவர்கள் மற்றும் பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் மதனை தருமபுரியில் கைது செய்தனர்.

அது போல் இவரது மனைவி கிருத்திகாவும் இந்த ஆபாச பேச்சுக்கு உடந்தை என்பதால் அவரையும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இருவரும் தற்போது சிறையில் உள்ளனர்.

விசாரணை

விசாரணை

இந்த நிலையில் போலீஸார் மதனிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது முதலில் வாய் மூடி மவுனியாகவே இருந்த மதனை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஹோட்டல் பிசினஸ்

ஹோட்டல் பிசினஸ்

இந்த நிலையில் மதனிடம் நடத்திய விசாரணையில் அவர் எப்படி ஆபாசமாக பேசுவது என நடித்துக் காட்டினார். அப்போது அவர் கூறுகையில் கிருத்திகாவை நான் காதல் திருமணம் செய்து கொண்டேன். குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என விரும்பினோம். இதற்காக சென்னை அம்பத்தூரில் ஹோட்டல் பிசினஸ் தொடங்கினோம். அதில் நஷ்டம் ஏற்பட்டது.

ஐடியா

ஐடியா

இதையடுத்து யூடியூப் சேனல் தொடங்கலாம் என கிருத்திகாதான் ஐடியா கொடுத்தார். அதன்படி பப்ஜி மதன் கேர்ள், மதன் 18 பிளஸ், டாக்ஸிக் மதன் ஆகிய பெயர்களில் சேனலை தொடங்கினேன். விபிஎன் தொழில்நுட்பம் மூலம் பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு அவற்றை எங்களின் யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்தோம்.

எண்ணிக்கை

எண்ணிக்கை

எங்கள் சேனலை 8 லட்சம் பேர் பார்த்தார்கள். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க நினைத்து ஆன்லைன் விளையாட்டின் போது அதிலுள்ள கதாபாத்திரங்களுக்கு நான் பின்னணி குரல் கொடுப்பேன். அந்த சமயம் பெண்களின் அந்தரங்க உறுப்பு குறித்து பேசுவேன். எதிர்முனையில் விளையாடும் என் மனைவியும் ஆபாசமாக பேசுவார். கிருத்திகா எனது மனைவி என தெரியாமல் யாரோ சந்தாதாரர் என நினைத்து மற்ற பெண்களும் ஆபாசமாக பேசினர்.

ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டு

இதனால் ஆன்லைன் விளையாட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தோம். எங்களுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இதில் 2 ஆடி கார்கள், சென்னை, சேலத்தில் சொகுசு பங்களாக்களை வாங்கினோம். 3 ஆண்டுகளில் 75 கோடி வருமானம் ஈட்டினோம் என்றார். இவர்களது வங்கிக் கணக்கில் கடைசியாக 4 கோடி இருப்பு இருந்தது.

கோடிக்கணக்கில் பணம்

கோடிக்கணக்கில் பணம்

கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த மதனும் கிருத்திகாவும் வருமான வரி தாக்கல் செய்யாமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வருமான வரித் துறைக்கும் கடிதம் வந்துள்ளது. இவர்களது செல்போன், கணினி உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்து தடயவியல் துறை சோதனைக்கு அனுப்பியுள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+