சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பா.ஜ.க ஆட்சியில்.. மக்களின் கருத்துரிமை நசுக்கப்படுகிறது.. உரிமைகள் பறிக்கப்படுகின்றன - நல்லகண்ணு

Google Oneindia Tamil News

சென்னை: பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்களின் கருத்துரிமை மறுக்கப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

public opinion has been denied since the BJP came to power says CPI Leader nallakannu

சென்னை மைலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் வடக்கு மண்டல கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும்,தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில தலைவருமான நல்லகண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த நல்லகண்ணு கூறியதாவது:- மத்தியில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.

அரசியலமைப்பு வழங்கிய ஒவ்வொரு உரிமையையும் மத்திய அரசு பறித்து வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொள்கைக்காகவும் பொதுமக்களின் நலனுக்காகவும் போராடி வரக்கூடிய நபர்களை பெகாசிஸ் மூலம் ஒட்டுகேட்டு இருப்பது மிக பெரிய தவறு. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் புறம்பாக உள்ளது.

நாட்டில் முதல் முறை...வாக்களிக்க லஞ்சம் கொடுத்த டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் ஜெயில் நாட்டில் முதல் முறை...வாக்களிக்க லஞ்சம் கொடுத்த டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் ஜெயில்

மத்திய அரசு அறிவித்த வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து போராடி வரக்கூடிய விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து அதனை ஒரு முடிவிற்கு கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் சிறப்பாக இருந்தது. அதனை அமல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நல்லகண்ணு கூறினார்.

English summary
Nallakannu, senior leader of the Communist Party of India, has said that public opinion has been denied since the BJP came to power
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X