தங்கமும் இனி தகரம் தானா? அவசரத்துக்கு இனி உதவாதா? கடும் கட்டுப்பாடுகளால் அதிருப்தி! ஆனாலும் பாருங்க!
சென்னை: நகை கடன் வழங்குவது தொடர்பாக இருமுறை ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இரண்டாவது முறையாக நேற்று 9 வகையான கட்டுப்பாடுகளை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் நகை கடன் பெறுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
உலக அளவில் வர்த்தகத்தில் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது. வெளிநாடுகளில் மிகச் சிறந்த முதலீடாக தங்கம் பார்க்கப்படுகிறது. போர், பொருளாதார சீரழிவு உள்ளிட்ட காலங்களில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும் தங்கம் மிகச்சிறந்த முதலாக ஒருபுறம் பார்க்கப்பட்டாலும், அது ஒரு கௌரவமாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பெண்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இல்ல நிகழ்ச்சிகள் தொடங்கி எந்த விசேஷமாக இருந்தாலும் தங்கத்தை சீர் செய்வதிலும், அதனை அணிந்து கொண்டு அழகு பார்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வீட்டில் ஒரு பொட்டு தங்கமாவது இருக்க வேண்டும் என கூறுவதை பார்க்க முடியும். தற்போது உலக அளவில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது. தொடர்ந்து விலை அதிகரித்தாலும் மக்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆடம்பர தேவைக்கு என்று இல்லாமல் அதனை அவசர தேவைக்கு உதவும் பொருளாகவும் பார்க்கின்றனர். அவசர மருத்துவம் உள்ளிட்ட தேவைகள் ஏற்பட்டால் தங்கத்தை அடகு வைத்தால் உடனடியாக பணம் கிடைக்கும். அதே நேரத்தில் தனியார் நகை அடகு கடைகளில் வைப்பதை விட வங்கிகளில் வைத்தால் குறைந்த வண்டி என்பதோடு பாதுகாப்பாக இருக்கும் என்பதால் வங்கிகளில் நகையை அடகு வைக்கவே மக்கள் விரும்புகிறார்கள்.
அதே நேரத்தில் நடுத்தர மக்களின் தலையில் இடியே இறக்கும் வகையில் ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதிர்ச்சி அளிக்கும் வகையில் நகையை முழு தொகை செலுத்திய பிறகு தான் திருப்ப முடியும் என்ற விதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முன்பெல்லாம் வட்டியை மட்டும் செலுத்தி அதனை மறு அடக்க வைக்கலாம். ஆனால் தற்போது வட்டி அசல் இரண்டையும் செலுத்தி விட்டு அதற்குப் பிறகுதான் நகையை மறு அடகு வைக்க முடியும். அதுவும் அடுத்த நாள் தான் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தங்க நகை அடகு தொடர்பாக மீண்டும் ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும், நகையின் உரிமையாளர்கள் இவர்தான் என உறுதிப்படுத்த பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும், தங்கத்தின் தரத்தை உறுதி செய்ய தரச் சான்றிதழ் வழங்க வேண்டும், தங்க நகைகள் அலங்கார பொருட்கள் தங்க நாணயங்களை மட்டுமே அடமானமாக இருக்க வேண்டும், ஒரு நபருக்கு அதிகபட்சம் ஒரு கிலோ நகைகள் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானம் வைக்க முடியும், 22 கேரட் தங்கத்தின் அடிப்படையில் தான் மதிப்பை கணக்கிட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதற்கு பொதுமக்கள் தரப்பிலும் வியாபாரிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இந்தியாவில் தங்க நகை கடன் பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தான் வந்திருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 400 கோடி ரூபாய் அளவுக்கு தங்க நகை கடன் வழங்கப்பட்டது, அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. கிட்டத்தட்ட இது 71 ஆயிரம் கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டு மே வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சம் கோடியை தாண்டி இருக்கும் எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இது 2 லட்சம் கோடியாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications