எங்க கிட்ட அந்த ஆளை ஒப்படைங்க.. நாங்களே தண்டனை தர்றோம்.. கொதித்து கொந்தளித்த பெண்கள்!
ஷன்மதி கொலை செய்யப்பட்டதில் பொதுமக்கள் திரண்டு மறியல் செய்தார்கள்
Recommended Video
சென்னை: "எங்க கிட்ட அந்த ஆளை ஒப்படைங்க.. வக்கீல்கள் யாரும் அவருக்காக வாதாட கூடாது.. நாங்களே தண்டனை தர்றோம்" என்று 4 வயது பெண் குழந்தையை நாசம் செய்து, பாத்ரூம் பக்கெட்டில் கொன்று போட்ட மீனாட்சி சுந்தரத்துக்காக பெண்கள் கொதித்து போய் சொன்னார்கள்.
நேற்று முன்தினம் 4 வயது ஷன்மதியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, தாய் செந்தமிழ்செல்வி மகனை டியூஷனில் விட போனார். திரும்பி வந்து பார்த்தால், குழந்தை பாத்ரூம் பக்கெட்டில் கோணிப்பையில் சடலமாக கிடந்தது.
இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தியதில் பக்கத்து வீட்டுக்காரர் ராஜேந்திரன் மீது சந்தேகம் வலுத்தது. 60 வயசு ராஜேந்திரன் ஒரு முன்னாள் ராணுவ வீரராம். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் சொல்லி உள்ளதாவது:

பாத்ரூம்
"வா விளையாடலாம் என்று ஷன்மதியை என் வீட்டுக்கு கூட்டிட்டுபோனேன். என் பெட்ரூமில் வைத்து பலாத்காரம் செய்தேன். இதில் குழந்தை அலறினாள். பக்கத்து ரூமில் என் மனைவி இருந்தாள். சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்களோ என்று நினைத்து, வீட்டில் இருந்த ஒரு சணல் கயிற்றால் குழந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டேன்.

புகார்
அரிசி போட்டு வைச்சிருந்த கோணிப்பை ஒன்று காலியா இருந்தது. அதில் குழந்தையின் சடலத்தை போட்டு பாத்ரூமில் வைத்து விட்டேன். அந்த நேரத்தில் செந்தமிழ்செல்வி குழந்தையை அக்கம் பக்கம் வீடுகளில் தேடி கொண்டிருந்தார். குழந்தையின் அப்பா போலீசில் புகார் கொடுக்க போகும்போது, எதுவுமே நடக்காதது போல நானும் கூட சென்றேன்.

கைது
ஆனால் என்வீட்டில் பினாயில் வாடை வந்ததால், போலீசார் என் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போதான் குழந்தையின் தலைமுடி, கம்மல், வளையல் என் பெட் மீது இருந்தது. என்னை பிடித்து விட்டார்கள்" என்றார். இதையடுத்து மீனாட்சி சுந்தரத்தையும், உடந்தையாக அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

போராட்டம்
ஆனால் பொதுமக்களோ, சிடிஎச் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த மீனாட்சி சுந்தரம் மீது நிறைய புகார்கள் அந்த பகுதியில் உள்ளதாம். "எங்க கிட்ட அந்த ஆளை ஒப்படைங்க.. வக்கீல்கள் யாரும் அவருக்காக வாதாட கூடாது.. நாங்களே தண்டனை தர்றோம்" என்று பெண்கள் ஆவேசமாக கூறினார்கள். அதேபோல, மீனாட்சி சுந்தரம் வீட்டின் முன்பும் முற்றுகை போராட்டம் நடந்தது. ஒரே நாளில் தனித்தனியாக பெண்கள் போராட்டம் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

அடக்கம்
குழந்தையின் பிறப்பு உறுப்பில் காயம் இருந்தது என்றும், கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்தது. இதையடுத்து, குழந்தையின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்படாமல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் இருந்து நேரடியாக அண்ணனூர் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications