வீட்ல நாய் வளர்க்கிறீர்களா? கடிவாளம் போடும் சென்னை மாநகராட்சி! ஈசியா லைசன்ஸ் வாங்கலாம்.. எப்படி?
சென்னை: செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பை தொடர்ந்து உரிமையாளர்கள் இணைய வழியில் உரிமம் பெறும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், செல்லப்பிராணி உரிமையாளர்கள் ஆண்டு தோறும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுமி, சிறுவனை நாய்கள் தாக்கியதை தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் தங்களது வளர்க்கும் விலங்குகளுக்கு உரிமம் பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனையடுத்து எப்படி உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த வழிகாட்டுதல்களை சென்னை மாநாகராட்சி வெளியிட்டுள்ளது. அதில்..
பின்னர் அதில் உள்ள பல சேவைகளில் செல்லப் பிராணிகளின் உரிமம் (Pet Animal License) என்பதனை தேர்வு (Click) செய்யவும், பின்னர் New user என்பதை தேர்வு (Click) செய்து அதில் தங்களது விவரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க எண்ணை (Pin Number) உள்ளீடு செய்யவும்.
இதனை தொடர்ந்து தங்களது அலைபேசி எண்ணையும் நான்கு இலக்க எண்ணையும் (Pin Number) பயன்படுத்தி உள்நுழையவும். புதிய செல்லப்பிராணிகளின் உரிமம் (New Pet Registration) என்பதை தேர்வு செய்யவும்.
செல்லப்பிராணிகளின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிமையாளர் புகைப்படம். முகவரி சான்றின் புகைப்படம், செல்லப்பிராணியின் புகைப்படம், ஒரு வருடத்திற்குள்ளாக வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி (ARV) செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உறுதி மொழி (Declaration) அளித்த பின்னர் சமர்ப்பிக்க (Submit) வேண்டும்.
இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி மருத்துவர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பிறகு உரிமையளார்கள் தங்களது பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் உள்ள இணைய முகப்பு (Portal) பக்கத்திற்கு சென்று இணைய வழியில் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) பணம் செலுத்த வேண்டும்.

அதன் பிறகு செல்லப்பிராணிகளின் உரிமம் (Pet Animal License) பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு (Link) உருவாகும். அதனை கொண்டு செல்லப்பிராணிகளின் உரிமத்தை (Pet Animal License) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உட்பட்ட செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டு தோறும் தங்களது செல்லப்பிராணிகளின் உரிமத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என கூறப்பட்டுள்ளது.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications