முதல்வர் ஸ்டாலினுடன், தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு.. முதல்வர் முகத்தில் புன்னகையை பாருங்க!
சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.
Recommended Video
தமிழிசை சவுந்ததராஜன் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் (பொறுப்பு) பதவி வகித்து வருகிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுறது. அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் புத்தகங்களை பரிசாக வழங்கினார். தமிழிசை சவுந்தரராஜன் புத்தகம் வழங்கியபோதும், அவருடன் பேசிக் கொண்டிருந்த போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புன்னகை மலர இருந்ததை காண முடிந்தது.

தேர்தல் முடிந்த பிறகு முதன் முறையாக தமிழ்நாடு வந்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இந்த சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், 'மரியாதையை நிமித்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறினேன். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து பேசியதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications