இந்தியாவை மிக உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.. ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்
தமிழிசை சவுந்தராஜன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டுள்ளார்
சென்னை: நமது தாய் நாடான இந்தியாவை எதிர்காலத்தில் மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புத்தாண்டு வாழ்த்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.. நம் தமிழகத்திலும் இதை சிறப்பாகவே கொண்டாடுவது வழக்கம் என்பதால், ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்என்ரவி தெரிவித்திருந்த வாழ்த்தில், தமிழக மக்கள் புதிய நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் வாழ வேண்டும். ஒருவருக்கு ஒருவர் நல்லிணக்கத்துடன் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முக ஸ்டாலின்
அதேபோல, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், "நம்பிக்கையுடன் பிறக்கும் 2022 புத்தாண்டில் இனிமை சூழ்ந்து இன்னல் அகலட்டும். பேரிடரைக் கடந்து மக்கள் யாவரும் நலன் பெற்றிடும் ஆண்டாக 2022 அமைய விரும்பி, தமிழ்நாட்டு மக்களுக்கு நமது அரசின் சார்பில் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருமே தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருந்தனர்..அதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வாழ்த்தில், "பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக தமிழகம் பல நிலைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை காப்பாற்ற எண்ணற்ற வெற்றிகளை குவித்து வருகிற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் இருக்கிறது. அதனை நிறைவேற்றுகிற வகையில் ஓரணியில் திரண்டு 2024 பொதுத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழிசை சவுந்தராஜன்
அந்த வகையில், தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்தில், "புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 2022-ம் ஆண்டில் புதிய இலக்குகளையும், குறிக்கோள்களையும் நோக்கி நாம் பயணிக்க வேண்டும். இந்தியாவின் ஆளுமை, ஒன்றுபட்ட உணர்வு, உலகிற்கு தலைமை ஏற்கும் தகுதி ஆகியவற்றை உலகிற்கு பறைசாற்றும் ஆண்டாக 2021-ம் ஆண்டு அமைந்தது.
Recommended Video

சுதந்திரம்
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வேளையில் நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒன்றுபட்ட வளர்ச்சிக்காவும் நம்மை மீண்டும் அர்ப்பணித்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக விலகாத நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழாக்களையும், பண்டிகைகளையும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications