தேர்தலில் வென்றவர்களை தனித்தனியாக அழைத்து விஜய் பேசியது என்ன? - புஸ்ஸி ஆனந்த் பேட்டி
சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்கள் கிராம வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.
Recommended Video
அதாவது விஜய் மக்கள் இயக்கத்தினர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று மற்ற அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தனர்.

பொன்னாடை போர்த்தி வாழ்த்து
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இன்று சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நடிகர் விஜய் இவர்களுக்கு தனித்தனியாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

குருப் போட்டோ எடுத்துக் கொண்டார்
இந்த நிலையில் இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:- மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தளபதி மக்கள் இயக்கம் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் செய்வார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தளபதியை(நடிகர் விஜய்யை) சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரிடமும் நின்று விஜய் குருப் போட்டோ எடுத்துக் கொண்டார்.

தமிழக மக்களுக்கு நன்றி
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை விஜய் தனித்தனியாக சந்தித்து பேசினார். மக்களை அணுகியது எப்படி? தேர்தலுக்கு தயாரானது எப்படி? போன்ற தகவல்களை விஜய் அவர்களிடம் கேட்டறிந்தார். அவர்களுக்கு சால்வை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தார். நடிகர் விஜய் படம், மக்கள் இயக்கத்தின் கொடியை வைத்து நங்கள் ஓட்டு கேட்டோம். எங்களை வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

விஜய் உத்தரவு
''மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டுள்ளார்கள். எனவே மக்களுக்கு தேவையான விஷயங்களை, உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும்'' என்று விஜய் அவர்களுக்கு உத்தரவிட்டார். ''நாங்கள் உங்கள் பெயரை கண்டிப்பாக காப்பாற்றுவோம்'' என்று தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விஜய்யிடம் தெரிவித்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட வாரியாக, வர்த்தக அணி உள்பட பல்வேறு அணிகளுக்கு தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் தனிப்பட்ட எந்த முடிவையும் எடுக்க முடியாது. விஜய்தான் எங்களுக்கு தலைவர். அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நாங்கள் செய்வோம். இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications