அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம் கட்சி.. ஒரு தொகுதி ஒதுக்கீடு!
Recommended Video

சென்னை: அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நடுவே இன்று அதிமுக தலைமையகத்தில் உடன்படிக்கை கையெழுத்தானது.

இன்று காலை சுமார் 11.30 மணியளவில், அதிமுக தலைமையகத்திற்கு, கிருஷ்ணசாமி வருகை தந்தார். அங்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் தலைமையிலான நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.

இதையடுத்து, 2019ம் ஆண்டு, லோக்சபா தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தானது.
பின்னர் நிருபர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் அதிமுக, புதிய தமிழகம் கட்சிகள் கூட்டணி அமைத்து தமிழகம், புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக, புதிய தமிழகம் கட்சிக்கும் நடுவே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அதிமுக தலைமையிலான இக்கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு லோக்சபா தொகுதி ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
கிருஷ்ணசாமி பேசுகையில் கூறியதாவது: 2019ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தேசிய அளவில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும், மாநில அளவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான, அதிமுக தலைமையில் அமைந்துள்ள மகத்தான வெற்றிக் கூட்டணியிலும், புதிய தமிழகம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

21 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், புதிய தமிழகம் கட்சி, தனது முழு ஆதரவையும், அதிமுக வேட்பாளர்களுக்கு அளிக்கும். எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள லோக்சபா தொகுதியில், புதிய தமிழகம் கட்சி எங்களுடைய தனிச் சின்னத்திலேயே போட்டியிடும். எனது சமுதாயம் சார்ந்த, 90 ஆண்டுகால, கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது மிகப்பெரிய அளவில் தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications