புழல் சிறையில் கைதிகளுக்கான கேண்டீனை மூடவில்லை.. சிறை நிர்வாகம் ஐகோர்ட்டில் தகவல்!
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேண்டீன் மூடப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதி பக்ரூதின் என்பவர், புழல் சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் திடீரென கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டதாகவும், அதனை திறக்க உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.சத்தியநாராயண பிரசாத், வி.லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, கைதிகளுக்கான கேண்டீன் மூடப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே கேண்டீனை மீண்டும் திறக்கக்கோரி மனு அளித்ததாகவும் கூறினார். மேலும், மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கேண்டீனை திறக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், புழல் சிறையில் கைதிகளுக்கான கேண்டீன் மூடப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இருப்பினும் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் உறுதி அளித்தார். இதனையடுத்து, சிறை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications