முழு கொள்ளளவை எட்டியது புழல் ஏரி! 3,300 மில்லியன் கன அடி நீர் இருப்பு.. நீர் திறப்பு அதிகரிப்பு!
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி முழு கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 470 கன அடியில் இருந்து 640 கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வந்ததன் காரணமாக புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், மீண்டும் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழையைக் கொடுத்தது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், புழல் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், புழல் ஏரி முழு கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 470 கன அடியில் இருந்து 640 கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பு 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 21.2 அடியை எட்டி உள்ளதால், நீர் திறப்பு தற்போது 300 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் நீர் திறப்பும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications