பழங்கால கட்டிடங்கள் புனரமைக்கும் பணி... 2 காளைகளை வாங்கிய பொதுப்பணித்துறை
Recommended Video
சென்னை: சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள ஹுமாயூன் மஹாலை புனரமைப்பதற்காக பொதுப்பணித்துறை சார்பில் 2 காங்கேயம் காளைகள் வாங்கப்பட்டுள்ளன.
சுமார் 250 ஆண்டுகள் பழமையுடைய ஹூமாயூன் மஹால் முழுக்க முழுக்க சுண்ணாம்பைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த கட்டிடத்தை புனரமைப்பதற்காக சுண்ணாம்பு கலவை தயார் செய்யப்பட்டு அதன் மூலம் பூச்சு வேலைகள் நடந்து வருகின்றன.

அரசு நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள பாரம்பரிய பழமையான கட்டிடங்களை சீரமைப்பதற்கான பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை மூலம் அந்த பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மிகப் பழமைவாய்ந்த கட்டிடமான ஹூமாயூன் மஹால் ரூ.36 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

2 காளைகள்
ஹூமாயூன் மஹால் சுண்ணாம்புக் கலவையை கொண்டு கட்டப்பட்டுள்ளதால், மீண்டும் சுண்ணாம்புக் கலவையை கொண்டே அதனை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் 2 காங்கேயம் காளைகளை வாங்கி சுண்ணாம்பு கலவையை தயார் செய்கின்றனர். நாளொன்றுக்கு மாடுகளை பயன்படுத்தி 5 மூட்டைகள் வரை சுண்ணாம்புக் கலவை தயாரிக்கப்படுகிறது.

ஆள் நியமனம்
சுண்ணாம்பு கலவையை தயாரிக்க எழிலகம் வளாகத்திலேயே செக்கு போன்ற அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மாடுகள் வளைய வருமாறு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு காளைகளையும் நிர்வகித்து அதனை பராமரிக்க ஒருவரையும் பணிக்கு அமர்த்தியுள்ளது பொதுப்பணித்துறை.

பழங்கால முறை
சென்னை எழிலகம் வளாகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களும், அங்கு பணி நிமித்தமாக வருபவர்களும் இந்த நடைமுறையை ஆர்வமுடன் கண்டு ரசிப்பது குறிப்பிடத்தக்கது. பழங்கால முறையை பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் செய்வதை பார்வையிடுவது அவர்களுக்கு புதிய அனுபவத்தையும் தருகிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications