நாளை இரவு வானில் நடக்க உள்ள அதிசயம்.. மிஸ் பண்ணாதீங்க மக்களே! கண்களுக்கு விருந்து
சென்னை: ஒவ்வொரு நாளும் இரவில் வான்வெளியில் பல அதிசயங்கள் நடக்கின்றன. அந்த வகையில், நாளை தொடங்கி டிச.4ம் தேதி வரை விண்கல் மழை பொழிய உள்ளது. இதனை வெறும் கண்களால் கண்டு ரசிக்கலாம்.
விண்கல் மழை: ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட நாட்களில் விண்கற்கள் மழை பொழியும். இதற்கு காரணம் வால் நட்சத்திரங்கள்தான். வால் நட்சத்திரங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இது பூமியின் சுற்றுவட்ட பாதை வழியாக போகும் போது அதன் தூசிகளை, சிறு கற்களை விட்டு விட்டு செல்லும். பூமி இந்த தூசி துகள்களுக்கு அருகே வரும்போது, அந்த துகள்கள் ஈர்ப்பு விசையால் பூமிக்குள் நுழைகின்றன. இப்படி நடக்கும்போது வளிமண்டலத்தில் உரசி தூசிகள் எரிந்துவிடும். இதை பார்ப்பதற்கு விண்கல் மழையை போல தோன்றும்.

நாளை அதிசயம்: அந்த வகையில் நாளை குவாட்ரண்ட் விண்கல் மழை பொழிய இருக்கிறது. டிச.17ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை இந்த விண்கற்கள் பூமி மீது பொழியும். ஆனால் ஜன.3 மற்றும் 4ம் தேதிகளில்தான் இது உச்சத்தை எட்டும். அதாவது நாளையும் நாளை மறுநாளும்தான் வானத்தில் நூற்றுக்கணக்கில் விண்கற்கள் மழையாய் பொழியும். ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே இது நீடிக்கும் என்பதால், வாய்ப்பு இருப்பவர்கள் பார்க்க தவறாதீர்கள். இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
அதிவேகம்: இந்த விண்கற்கள் பூமி மீது மணிக்கு சுமார் 14,8059 கி.மீ வேகத்தில் மோதுகிறது. ஆனால் நமது வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகம். எனவேதான் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 120 விண்கற்கள் வரை பூமிக்குள் நுழைகின்றன. வழக்கமாக சில விண்கல் நிகழ்வுகளை வெளிநாடுகளில் மட்டுமே பார்க்கும் வகையில் இருக்கும். ஆனால் இந்த விண்கல் மழையை இந்தியாவிலிருந்தே கண்டுகளிக்கலாம்.
சென்னையில் இருந்து பார்க்க முடியுமா?: சென்னையில் ஒளி மாசு அதிகம். எனவே இங்கிருந்து பார்த்தால் தெளிவாக தெரிவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் சென்னைக்கு அருகே திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து பார்த்தால் தெளிவாக தெரியும். இங்குள்ள வைணு பாப்பு வான் ஆய்வகத்திற்கு அருகே ஒளி மாசு குறைவு. அங்கிருந்து பார்த்தால் விண்கல் மழையை அருமையாக ரசிக்கலாம். ஆய்வகத்துக்கு சென்று அங்குள்ள கருவிகளை கொண்டு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆய்வகம் அமைந்துள்ள பகுதியில் நின்று வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே விண்கல் மழையை ரசிக்க முடியும்.
திருப்பத்தூர் மட்டுமல்லாது, சென்னையை சுற்றி ஒளி மாசு எங்கு குறைவாக இருக்கிறதோ அங்கிருந்து பார்த்தால் கூட இதை கண்டு ரசிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். என்ன மக்களே அதிசயத்தை பார்க்க நீங்கள் ரெடியா?
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications