தமிழகத்தில் காலாண்டு, பருவத் தேர்வுகள் தொடங்கியது! 1 முதல் 12ஆம் வகுப்புக்கு இன்று முதல் தொடக்கம்!
சென்னை: தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பருவத் தேர்வுகள் மற்றும் காலாண்டுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் ஒரே மாதிரி பொது காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தேர்வுக்கான வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால், நடப்பாண்டில் பொது காலாண்டுத் தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை திடீரென அறிவித்தது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் காலாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.

காலாண்டு தேர்வுகள்
பள்ளி அளவில் தேர்வுக்கான வினாத்தாள்களைத் தயாரித்து, தேர்வை நடத்த வேண்டும் என்றும், தேர்வுக்கான தேதிகளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், காலாண்டு தேர்வுகளை வரும் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தேர்வுகள் தொடக்கம்
அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்குகிறது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தொகுத்தறியும் மதிப்பீட்டு தேர்வு என்ற முறையில் பருவத் தேர்வு நடத்தப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் இன்றுமுதல் நடத்தப்படுகிறது. பாடவாரியாக தனித்தனியே காலாண்டுத் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

காலாண்டு விடுமுறை
ஏற்கெனவே நடப்பு ஆண்டுக்கான காலாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 9-ம் தேதி வரையும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 5-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு
தற்போது காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வுகள் முடிந்த பின்னர், மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை முடிந்த பின்னர், ஒன்று முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, அக்டோபர் மாதம் 10-ம் தேதி, பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படும். இதேபோல், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்த பின்னர், அக்டோபர் 6-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
-
வெறும் 1 மணி நேரம்.. ஒட்டுமொத்த சிபிஎஸ்இ சிஸ்டமும் ஹேக்.. அம்பலப்படுத்திய 19 வயது இளைஞர் -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
சிதைந்துபோன மாணவர்கள் நம்பிக்கை.. CBSE விவகாரத்தில் குளறுபடிகள் என்ன? அதிர வைக்கும் ரிப்போர்ட் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications