விஜய் முதல்வர் ஆவாரா? இல்லையா? தமிழகமே பரபரப்பில் இருக்க கூலாக அண்ணாமலை போட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது தமிழகமே பரபரப்பில் உள்ளது. விஜய் ஆட்சியை பிடிப்பாரா? முதல்வர் ஆவாரா? அவர் மெஜாரிட்டியை நிரூபிப்பாரா? இல்லாவிட்டால் திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்று மொத்த அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் கவனமும் இதில் தான் உள்ளது. இந்த பரபரப்பை கூட்டும் வகையில் அவ்வப்போது 'பிரேக்கிங்' செய்திகள் வந்து பிரஷரை எகிற வைக்கின்றன. இப்படியான சூழலில் தான் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இப்படியான பரபரப்பு ஏதுமின்றி நேற்று நள்ளிரவில் தனது இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது.

தற்போது தமிழக மக்களின் ஒற்றை கேள்வியாக இருப்பது அடுத்த முதல்வர் யார்? என்பது தான். சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக சாதித்துள்ளது. ஆனால் அவருக்கு மெஜாரிட்டிக்கான 118 எம்எல்ஏக்கள் கிடைக்கவில்லை.

annamalai bjp

இதனால் அவர் பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறார். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களின் ஆதரவுகளை சேர்த்து 116 எம்எல்ஏக்கள் வரை தேற்றிவிட்டார் விஜய். இருப்பினும் 2 எம்எல்ஏக்கள் பற்றாக்குறையாக உள்ளது.

பரபரப்பில் தமிழக அரசியல் களம்

இதை சரிசெய்ய விஜய், விசிக தலைவர் திருமாவளவன் வசம் உள்ள 2 எம்எல்ஏக்களின் ஆதரவை கோரியுள்ளார். திருமாவளவன் தனது கட்சியின் உயர்நிலை குழுவில் நேற்று விவாதித்த நிலையில் இன்று முடிவை அறிவிக்கிறார். அவரது முடிவு என்னவாக இருக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே தான் நேற்று விஜய் அமமுகவின் ஒற்றை எம்எல்ஏ காமராஜ் ஆதரவு தந்துள்ளதாக கூறி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கடிதம் வழங்கினார். ஆனால் அதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மறுத்துள்ளார். தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்எல்ஏவை கடத்தி உள்ளதாக ஆளுநர் மற்றும் போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பில் உள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி?

இப்படி, மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய் திணறி வருகிறார். இது ஒருபுறம் இருக்க விஜய் மெஜாரிட்டியை நிரூபிக்காவிட்டால் அடுத்ததாக திமுக - அதிமுக கூட்டணி ஆட்சியை அமைக்க திரைமறைவில் வேலை செய்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? யாருடைய ஆட்சி அமையும்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக அனைவரும் கேட்டு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழக மக்களும், அரசியல்வாதிகளும் டென்ஷனில் உள்ளனர்.

அண்ணாமலை பகிர்ந்த போட்டோ

ஆனால் இப்படி எந்த டென்ஷனும் இன்றி கூலாக இருக்கிறார் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. தமிழக அரசியலில் களேபரம் நடக்கும் நிலையில் அண்ணாமலை கூலாக நேற்று நள்ளிரவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்ணாமலை கருப்பு நிற உடை அணிந்து தலையில் தொப்பி வைத்தை கடற்கரையோர பாறையில் நின்று கடலை ரசிக்கும்படியாக அந்த போட்டோ அமைந்துள்ளது.

கவனம் பெற்ற 'கேப்ஷன்'

அதுமட்டுமின்றி இந்த போட்டோவுக்கு அவர் 'கேப்ஷன்' ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ''புயலில் இருந்து விலகி அமைதியான தென்றலாக'' என பதிவிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பதிவுக்கு அவரது ஆதரவாளர்கள் லைக்குகளை அள்ளி கொடுத்து வருகின்றனர். அதோடு சிலர் தமிழக அரசில் நிலவரத்தை சுட்டிக்காட்டி வேடிக்கையாக கமெண்ட்டுகள் செய்வதோடு, சிலர் ''கம்பேக் கொடுங்க அண்ணா'' என கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+