அப்பாவு கையில் "அந்த" முடிவு.. சட்டை கிழியுமா.. சங்கடம் ஏற்படுமா? அதிமுகவை ஆட்டிப்படைக்கும் ஒரு சீட்
சென்னை: நாளை தமிழ்நாடு சட்டசபை கூட உள்ள நிலையில் எதிர்க்கட்சி துணை தலைவர் சீட்டில் அமர போகும் நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில்தான் நாளை தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது. அதிமுகவின் எதிர்கட்சித் தலைவர் தலைவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக கொறடா வேலுமணி சார்பாக சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. அதன்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுகிறார். ஆர்பி உதயகுமாரை துணை தலைவராக தேர்வு செய்கிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளது.
எதிர்க்கட்சி துணை தலைவரை நீக்குவது என்றால் அதற்கு சபாநாயகர்தான் அனுமதி அளிக்க வேண்டும். அப்பாவு என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதில் சில சிக்கல்கள் உள்ளன
சிக்கல் 1 - பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பொறுத்து எடப்பாடி எடுத்த முடிவுகள் மாறும். எதிர்க்கட்சி துணை தலைவர் மாற்றப்பட்ட முடிவும் மாறுதலுக்கு உரியதே!
சிக்கல் 2 - பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பொறுத்து எடப்பாடி எடுத்த முடிவுகள் மாறும். எதிர்க்கட்சி துணை தலைவர் மாற்றப்பட்ட முடிவும் மாறுதலுக்கு உரியதே!
சிக்கல் 3 - இதில் தேர்தல் ஆணையம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சபாநாயகர் (ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் இருந்தாலும்) இதை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி உள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது சட்டசபையில் இருக்கை பிரச்சனை நிலவுகிறது.
எடப்பாடிக்கு அருகே ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று கோரிக்கையை எடப்பாடி தரப்பு வைத்துள்ளது. எதிர்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் என்பதால் இரண்டு பேரையும் அருகருகே அமர வைத்துள்ளனர். இப்படி அமர வைக்க கூடாது. ஓ பன்னீர்செல்வத்தை வேறு இடத்தில் அமர வைக்க சொல்லலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இதில் சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதில் பின்வரும் சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
வாய்ப்பு 1 - எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் என்று அப்பாவு ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ் இருக்கை அவருக்கு அளிக்கப்படும்.
வாய்ப்பு 2 - எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால், ஓபிஎஸ் எதிர்கட்சித் துணை தலைவராக தொடர்வார். அப்படி நடந்தால் சட்டசபையில் பெரிய மோதல்கள் ஏற்படலாம். சட்டை கிழியும் சம்பவங்கள் கூட நடக்கலாம்.
வாய்ப்பு 3 - அப்பாவு முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றால் அதை எதிர்த்து, அதிமுக எடப்பாடி ஆதரவு எம்எல் க்கள் சட்டசபையை புறக்கணிக்க வாய்ப்புகள் உள்ளன.
நாளை தமிழ்நாடு சட்டசபை கூட உள்ள நிலையில் எதிர்க்கட்சி துணை தலைவர் செட்டில் அமர போகும் நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications