ஆமா.. இவ்ளோ அமளி துமளி நடக்குதே.. ஓபிஎஸ்-இபிஎஸ் பேசிக்கிறாங்களா? ஆர் பி உதயகுமார் பதிலை பாருங்க
சென்னை: ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் பேசிக் கொள்கிறார்களா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 11 பேர் கொண்ட தலைமை நிர்வாகக் குழு கூட்டம் கூடியது. இதில் ஓபிஎஸ்ஸும் கலந்து கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கடந்த 5 நாட்களாக ஒற்றைத் தலைமை குறித்து இரு தலைமைகளும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அது போல் ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்ததால் அவரை எடபபாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் புறக்கணிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆர் பி உதயகுமார்
இந்த நிலையில் இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறுகையில், ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றுவது குறித்து இரு தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் நல்ல முடிவு வரும். பொதுக் குழு தீர்மானத்தில் ஒற்றை தலைமை இருக்கிறதா என கேட்கிறீர்கள்.

பொதுக் குழு கூட்டம்
எந்த கட்சியிலாவது தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதில் என்ன இருக்கிறது என்பது சொல்லியுள்ளனரா? பொதுக் குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்த நகல் இருவருக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

ஒற்றைத் தலைமை
அது போல் ஒற்றைத் தலைமை குறித்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில் இரட்டைத் தலைமை நிலைப்பாடே தொடர வேண்டும் என்றார். அது போல் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கூறுகையில் தீர்மான குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்து பேச்சு எழவில்லை.

பொன்னையன்
தீர்மானங்கள் இறுதி வடிவம் பெற்றபிறகு முறையாக செய்தியாளர்களுக்கு கூறப்படும். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்படும் என்றார். மூத்த நிர்வாகி பொன்னையன் கூறுகையில் இன்றைய தினம் தலைமை குழு கூட்டம் சுமூகமாக முடிந்தது. தீர்மானத்தில் உள்ள குழுவில் கோஷ்டியெல்லாம் கிடையாது. இரு தரப்பினரும் ஏக மனதாக பேசியுள்ளோம். எது கட்சிக்கு நல்லதோ அதை தீர்மானமாக கொண்டு வருவோம் என்றார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications