முதல்வர் பரிந்துரைத்ததும்.. எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு
சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேச அனுமதி வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் உட்காருவதற்கு அதிமுகவினரிடையே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே புதிதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஆர்.பி உதயகுமாருக்கு இருக்கையை அளிக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
எனவே இன்றைய தினம் அதுகுறித்து பேச வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அது போல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அதே கோரிக்கையை முன் வைத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் அதிமுக சட்டசபை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள உதயகுமாருக்கு, எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே இடம் ஒதுக்கி தருமாறு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அவையில் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் இது சபாநாயகருக்கான உரிமை என சபாநாயகர் அப்பாவு பல முறை விளக்கமளித்து வந்தார். இருந்தாலும் நான் கேட்டுக் கொள்வது, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை சபாநாயகர் மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யுமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, முதல்வர் பரிந்துரைபடி இந்த கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிலையில் இன்றைய தினம் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ்ஸின் இருக்கை 206 ஆம் எண்ணிலிருந்து 207ஆம் எண்ணுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை எழுந்த போது அதற்கு உடன்படாத ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து பொதுக் குழு உறுப்பினர்கள் நீக்கினர். இதையடுத்து அவரது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை தேர்வு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து அதிமுக தரப்பில் இந்த புதிய தேர்வு குறித்து சபாநாயகர் அப்பாவுக்கும் கடிதம் வாயிலாக தெரிவித்துவிட்டனர். பொதுவாக எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதனால் ஒருங்கிணைந்த அதிமுகவின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டனர். பின்னர் ஒற்றை தலைமை பிரச்சினைக்கு பிறகு சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கும் பக்கம் கூட எடப்பாடி பழனிசாமி திரும்பி பார்க்க மாட்டார்.
ஓபிஎஸ்ஸை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிய நிலையில் அங்கே ஆர்.பி. உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என அதிமுகவினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சபாநாயகரோ இது எனது தனிப்பட்ட முடிவு என்றே கூறி வந்தார். இந்த நிலையில்தான் நேற்று சட்டசபை கூட்டத் தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை பரிந்துரைக்குமாறு முதல்வர் ஸ்டாலின், சபாநாயகரிடம் தெரிவித்தார்.
முதல்வரும் எடப்பாடி பழனிசாமியும் எப்போதும் எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பேசியது அதிமுகவினர் மட்டுமல்லாமல் திமுகவினருக்கும் ஆச்சரியமாக இருந்துள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications